'கொடி பறக்குது' ரிலீஸுக்கு பிறகு ரஜினி சொன்ன விஷயம்... ஃபீல் பண்ண பாரதிராஜா!

 
rajini bharathiraja kodi parakkuthu

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த பாரதிராஜா கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார். இயக்குநர் இமயத்தின் மறைவுச் செய்தி திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

1977-ல் '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. இதில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாரதிராஜா பல படங்களை இயக்கி விட்டார்.

ரஜினியும் ஹீரோவாக பல படங்களில் நடித்து, அவரும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் பாரதிராஜாவும், ரஜினியும் கூட்டணி அமைத்து 1988-ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 'கொடி பறக்குது'.  இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ஏமாற்றத்தை தந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா கொடுத்த ஒரு பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "நான் எப்போதும் மென்மையாக படம் எடுப்பேன். ரஜினி ரசிகர்கள் கமர்ஷியலாக விரும்புவார்கள். ரெண்டு விதமான ரசிகர்களையும் டார்கெட் செய்து 'கொடி பறக்குது' படத்தை எடுத்தேன்.

ஆனா, ஆடியன்ஸ் என்கிட்ட இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கல. பாரதிராஜா-ங்குற பெயர்னால அந்த படம் தடுமாறிவிட்டது.  அதுல என் பெயருக்கு பதிலா வேற யாரோட பெயரை டைரக்ஷன் பண்ணவர் இவர்தான்னு போட்டிருந்தாலும், அந்த படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கும். படத்தோட ரிலீஸுக்கு அப்புறம் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தே என்கிட்ட சொன்ன விஷயம், தலைவா இது  உங்க படமாவும் இல்லாம, என்னோட படமாவும் இல்லாம நடுவுல ஒரு படமா வந்திருச்சேன்னு சொன்னார். இதே தான் நானும் ஃபீல் பண்ணுனேன்" என்று கூறியிருந்தார்.

From Around the web