இளையராஜாவைப் பற்றி நம்பவே முடியாத தகவல்கள்... சொன்னது இயக்குனர் இமயம்!

 
ilaiyaraja, bharathiraja

இசைஞானி இளையராஜா குறித்து மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா பஞ்சு அருணாச்சலம் 80  நிகழ்ச்சியில் இப்படி பேசியுள்ளார். என்னன்னு பாருங்க. இளையராஜாவைப் பற்றிச் சொல்லணும்னா அவன் ஒரு மிகப்பெரிய கலைஞன். உங்களுக்கு இப்ப தான். ஆனால் எங்களுக்கு அப்பவே பெரிய கலைஞன். நான் இதை எல்லா மேடைகளிலும் சொல்வேன்.

ஏன்னா கருவிகள் இல்லாத காலகட்டத்தில் இப்ப தான் கித்தார், வயலின்னு நிறைய வந்துருக்கு. அப்போ நாணல் தட்டையில் ஓட்டை போட்டு ஃப்ளூட் வாசிப்பான். நான் டைரக்டர். இவன் மியூசிக் டைரக்டர். கதையில திருத்தம் சொல்வான். யோவ் இதை ஏன் அங்கே வச்சிருக்க. அதைத் தூக்கி இங்கே போடுய்யா. இதைத் தூக்கி அங்கே போடுய்யான்னு சொல்வான். நானும் மாத்துவேன். ஏன்னா இவன் பெரிய எழுத்தாளர். ஓவியன். அருமையா படம் வரைவான்.

அவன் கையெழுத்து அவ்வளவு அருமையா இருக்கும். அவன் தலை எழுத்தும் அப்படித்தான் என்றார் பாரதிராஜா. அப்போது அங்கிருந்த கங்கை அமரனைப் பார்த்து பாரதிராஜா சொல்லும் போது இவன் 6ம் கிளாஸ் படிக்கிறான். என் நாடகத்துக்குப் பாட்டு எழுதுறான். அவன் தான் டூயட். அதுக்கு இசை இவன் தான். முதல் கதாநாயகன் நான் தான் இவங்களுக்கு என்று நச்சென்று சொன்னார் பாரதிராஜா. 

Tags

From Around the web