முதல் மரியாதைக்காக சிவாஜி கேட்ட அந்தக் கேள்வி... பாரதிராஜாவின் எதிர்பாராத பதில்!

 
bharathiraja, muthal mariyathai

முதல் மரியாதை படத்தை இயக்கும்போது பாரதிராஜாவுக்கு சிவாஜியுடன் கிடைத்த அனுபவங்கள் குறித்து முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அது என்னன்னு பாருங்க. 

சிவாஜி சார்கிட்ட போகும்போது எனக்குள்ளேயே ஒரு சிவாஜி இல்லையேன்னு இருந்தது. என் கதாபாத்திரத்துல உள்ள சிவாஜியை அவரு ஒத்துக்குவாரா? நான் என்ன செய்யணும்னு கேட்டார். இந்த மீசை இருக்கக்கூடாது. விக் இருக்கக்கூடாதுன்னு சொன்னேன். ஒருநாள் ஷூட் பண்ணி முடிச்சதும் கிரேட்னு சொன்னார். இதெல்லாம் நீ சொல்லிருந்தேன்னா நான் ஒரிஜினலா தலைமுடி வளர்த்துருப்பேனேன்னு சொன்னார். உங்ககிட்ட எப்படிங்க சொல்ல முடியும்? மண்ணுல உட்கார்ந்து படம் பார்த்தவன் நான். உங்ககிட்ட எப்படி சொல்ல முடியும்னு கேட்டு கொஞ்சம் கொஞ்சமா அவரை மாத்துனேன்.

மேக்கப் இல்லாம நடிக்க வச்சேன். அவரு மேக்கப் இல்லாம நடிச்சதே கிடையாது. லேசா மேக்கப் போட்டுட்டு வந்தார். அதையும் எடுக்க வச்சேன். என்னை நீ நடிக்கவே வேண்டாம்கறீயான்னு கேட்டார். ஆமா. நீங்க அப்படியே வந்தா போதும். என்னடா சொல்றேன்னாரு. நீங்க இப்படியே இருங்க. நான் என்ன சொல்றேனோ அதை அப்படியே சொன்னா போதும்னு சொன்னேன். அவரும் அப்படியே செஞ்சாரு. அவரு என் மோல்டுக்கு வந்ததால தான் இன்னைக்கும் அந்தப் படம் பேசப்படுது. ஜனங்க சொல்வது மட்டும் தான் உண்மை. ஏன்னா அவங்க வெகுஜனம்.

16 வயதினிலே, கிழக்குச் சீமையை ஒத்துக்கிட்டவன் தான இதைப் பேசுறான் என்றார் பாரதிராஜா. அது மட்டும் அல்லாமல், அங்கீகரிக்கும் போது ஒரு மூளையும், நிராகரிக்கும்போது ஒரு மூளையுமா இருக்கும்? வெகுஜனத்தோடு நான் ஒத்துப் போகும்போது நான் ஜெயிக்கிறேன் என்றார் பாரதிராஜா. வெகுஜனங்களோடு என்னோட எண்ணம் ஒத்துப் போகுது. என் இயல்புகளை மாத்தி இருந்தா என்னைத் தூக்கி எறிஞ்சிருப்பாங்க என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web