ரஜினி சாப்பிட கூப்பிட்டார்!. போனப்புறம்தான் தெரிஞ்சது!.. மொக்கை வாங்கிய போஸ் வெங்கட்!..
சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன் பின் வில்லனாக நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கியவர் ரஜினி. துவக்கத்தில் சில ஆயிரங்களில் மட்டும்தான் அவர் சம்பளம் வாங்கினார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த உருவான 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 2500 மட்டுமே. அதனால் எளிமையான வாழ்க்கை என்னவென்றால் ரஜினிக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் உணவில் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர் ரஜினி. பல வருடங்கள் அசைவு உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்த ரஜினி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டபின் முழுவதுமாக சைவத்திற்கு மாறினார்..
இந்நிலையில்தான், நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி பற்றி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். சிவாஜி திரைப்படத்தில் நடித்தபோது ரஜினி சாரோட நல்ல பழக்கமானது. ஒருநாள் எங்களை அவர் சாப்பிட கூப்பிட்டார்.. கம்பெனி சாப்பாடு கெரியர்ல வந்துச்சு.. அதை வேண்டாம் என்று சொல்லிட்டு நாங்கள் ரஜினி சார் கூட சாப்பிட போனோம்.. ஆளுக்கு ரெண்டு ராகி தோசை.. ஒரு வெங்காயம்,. ஒரு பச்சை மிளகாய் சாப்பிட வச்சாங்க.. ‘ இதான் தினமும் காலைல சாப்பிடுவேன்./. சாப்பிடுங்க’ன்னு சொன்னாரு ரஜினி சார்’ என சொல்லியிருக்கிறார்.
