யாரையும் விமர்சிக்க தயங்காத கவிஞர் கண்ணதாசன்... கெத்துன்னா இப்படி இருக்கணும்!
கண்ணதாசன் குறித்து ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்த பிரபலம்
கவிஞர் கண்ணதாசன். யாருடன் எல்லாம் நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றாரோ, அவர்களில் ஒருவரைக்கூட விமர்சிக்காமல் கண்ணதாசன் விட்டதே இல்லை.
கவிஞர் கண்ணதாசனைப் பொருத்தவரையில் ஒரு வித்தியாசமான மனிதர் என்று தான் சொல்ல வேண்டும். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பல அரசியல் ஆளுமைகளுடனும், பல கலையுலக ஆளுமைகளுடனும் மிக நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். யாருடன் எல்லாம் நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றாரோ, அவர்களில் ஒருவரைக்கூட விமர்சிக்காமல் கண்ணதாசன் விட்டதே இல்லை.
அவங்க நல்லது பண்ணும்போதெல்லாம் வாயார வஞ்சனை இல்லாமல் பாராட்டிய கவிஞர் கண்ணதாசன் அவங்க தப்பு பண்ணுனாங்கன்னு தெரிஞ்சா போதும். கடுமையாக அவர்களை விமர்சிப்பதை பழக்கமாக வைத்து இருந்தார். அப்படி அவரால் விமர்சிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. தனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எக்காலத்திலும் அவர்களிடம் உதவி கேட்டு நின்றது இல்லை.
அதே மாதிரி தான் அரசியல் வாழ்க்கையிலும் அரசியல் பிரமுகர்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கைக் கொண்டு தன் நிலையை உயர்த்திக் கொள்ள எக்காலத்திலும் அவர் பயன்படுத்தியது இல்லை. இதுபோன்ற அவரது குணங்கள் காரணமாகத் தான் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லோர் மீதும் அவரால் விமர்சனம் செய்ய முடிந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
