வறுமையிலும் ஒரு உறுதி... சந்திரபாபுக்கிட்ட அப்படி ஒரு குணமா?
சந்திரபாபு தமிழ்சினிமா உலகிலே எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நகைச்சுவை நடிகர்களில் மிக அதிகமான சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை சந்திரபாபுவுக்கு உண்டு. அவரைப் பொருத்தவரை அவரது திறமையோடு ஒப்பிடும்போது அந்தளவு படங்களில் நடித்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுக்கு என்ன காரணம்னு யோசிக்கிற பலரும் அவர் ஒரு பிரச்சனையான நடிகரா இருந்தார் என்பதாகத் தான் இருக்கும். ஆனா உண்மை அதுவல்ல. சந்திரபாபுவைப் பொருத்தவரைக்கும் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினார்.
தனக்கு ஒரு கதாபாத்திரம் பிடிக்கல என்றாலும், ஒரு படத்தில் அந்தக் கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை என்றாலும் அந்தப் படத்தில் நடிக்கவே மாட்டார் சந்திரபாபு. அதன் காரணமாகத்தான் அவரது படங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இல்லை. சந்திரபாபு வறுமையின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரை ஒரு படத்தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்ய வந்தார். அவர் அந்தக் காலத்திலேயே 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார். அந்தத் தொகைக்கான ஒப்பந்தப் பத்திரத்தை அவர் நீட்டியபோது, சந்திரபாபுவின் வீட்டில் இருந்த ரேடியோவை ரிப்பேர் செய்வதற்குக்கூட அவர் கையில் காசு இல்லை.
ஆனாலும் அவர் அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் அந்தப் படத்தோட கதாபாத்திரம் நல்லா இல்லை. அதனால அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பல என்றார். வறுமையின் உச்சத்தில் இருந்த போதும் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்குறதுல எந்தளவு அக்கறை காட்டி இருக்கிறார்னு நினைக்குற போது மிகவும் ஆச்சரியமாகத் தான் உள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
