சூட்டிங்ஸ்பாட்ல சந்திரபாபு கேட்ட விஷயம்... தட்ட முடியாத சிவாஜி... என்ன ஒரு பிரமாதம்?!

 
chandrababu, sivaji

ஜெமினி ஸ்டூடியோவில் வாய்ப்பு கேட்டுக் கொண்டு இருந்த காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு சந்திரபாபுவைத் தெரியும். அப்படின்னாலும் அவரோடு சேர்ந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு முதல் முறையாக கண்கள் என்ற திரைப்படத்தில் தான் கிடைத்தது. பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப்படுத்திய கிருஷ்ணன், பஞ்சு இரட்டை இயக்குனர்கள் தான் கண்கள் படத்தையும் இயக்கினர். இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த சந்திரபாபு அங்கு மேக்கப்போடு அமர்ந்திருந்த சிவாஜியைப் பார்த்த உடனேயே அவர் அப்படியே கட்டிப்பிடித்து தூக்கினார்.

படத்தினுடைய ஆரம்பக்காட்சியில் சக்சஸ்னு ஆரம்பிச்சதுல இருந்து கடைசியில கோர்ட் காட்சி வரைக்கும் 'கொன்னுட்டடா, என்ன நடிப்பு..?!" என சிவாஜியைப் பாராட்டித் தள்ளினார். அப்படி அவர் பாராட்ட பாராட்ட வெட்கத்தோடு நெளிந்த சிவாஜி, சரி சரி. உட்காருன்னு சந்திரபாபுவை ஒரு நாற்காலியில் உட்கார விட்டார். அப்பவும் சந்திரபாபு, 'அடங்கல. கணேசா... ஒரு ரிக்வஸ்ட். இங்க இருக்குற எல்லார் சார்பாகவும் கேட்கிறேன்.

பராசக்தி படத்துல அந்த கோர்ட் சீன்ல நடிச்சேல்ல. அந்த ஒரு கோர்ட் சீனை எல்லார் முன்னாடியும் இங்கே நடிச்சுக் காட்டணும்" என்று சிவாஜியிடம் கேட்டார். உடனே சிவாஜி, 'ஏற்கனவே சூட்டிங் லேட் ஆயிட்டு இருக்கு. இப்ப போய் அந்த கோர்ட் சீன் நடி. இந்த சீன் நடின்னு கேட்டுட்டு இருக்கே..." என்று சந்திரபாபுவைப் பார்த்து சிவாஜி சொன்னார். 'டைரக்டர் கோவிச்சிக்குவாருன்னு பார்க்குறீயா... கொஞ்சம் இருன்னுட்டு நேரா டைரக்டரிடம் சென்றார் சந்ரதிரபாபு. நீங்க டைரக்ட் பண்றேன்னு சொன்ன அந்தக் கோர்ட் சீனைத்தான் சிவாஜியை நடிக்கச் சொல்றேன்.

அந்தக் காட்சியை நேர்ல பார்க்கக்கூடிய வாய்ப்பை இங்கே எல்லாருக்கும் கொடுங்க"ன்னு கிருஷ்ணன் பஞ்சுவிடம் சந்திரபாபு சொன்னார். அப்போது, அவரால் தட்ட முடியவில்லை. சிவாஜியைப் பார்த்து அவர் தலையாட்ட, சந்திரபாபுவுக்காகவும், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்துக்காகவும் அந்தக் கோர்ட் சீனை எல்லார் முன்னாடியும் நடித்துக் காட்டினார். கண்கள் படத்தில் எனக்கும், சிவாஜிக்கும் இடையே தோன்றிய நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்தது என்பது என் பாக்கியம் என்று பல பத்திரிகைகளில் நடிகர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.


 

Tags

From Around the web