அப்பவே சந்திரலேகா படத்துக்கு இவ்ளோ தியேட்டர்களா? பிரம்மாண்ட படம் வெற்றி பெற எது தேவை?

 
chandraleka movie

இயக்குனர் ஷங்கர் ஒரு படத்துக்கு என்ன செலவழிப்பாரோ அதைப் போல 10 மடங்கு செலவழித்து படம் எடுக்குற இயக்குனர்கள் வந்து விட்டார்கள். ஆனால், இன்றைக்கும் பிரம்மாண்டம்னா நம் நினைவுக்கு வருபவர் ஷங்கர். இயக்குனர்களில் எப்படி ஷங்கரோ அதைப் போல தயாரிப்பாளர்களில் பிரம்மாண்டம்னா எஸ்எஸ்.வாசனைத்தான் சேரும். அதற்கு உதாரணமாக இன்று வரையில் இருப்பதுதான் அவரது தயாரிப்பில் உருவான சந்திரலேகா படம். அந்தக் காலகட்டத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் தான் செலவழிப்பார்கள்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் 15 படத்தைத் தயாரிப்பதற்கான செலவு சந்திரலேகா படத்தைத் தயாரிக்க ஆனது. ஏறக்குறைய 725 நாள்கள் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பை நடத்தினார் எஸ்எஸ்.வாசன். அந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பொதுவாக தமிழகம் முழுவதும் 15 அல்லது 20 திரையரங்குகளில் தான் படம் வெளியாகும். ஆனால் சந்திரலேகா வெளியிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை 120. சாதாரண தமிழ்ப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ, அது மாதிரி 6 மடங்கு திரையரங்குகளில் சந்திரலேகா படம் வெளியானது.

ஒரு படத்தை மக்கள் ரசிக்கிற அளவில் பிரம்மாண்டமாக எடுத்து விட்டால் அந்தப் படம் நிச்சயமாக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை எஸ்எஸ்.வாசன் நம்பியதால் தான் தன் கையில் இருந்த கடைசி காட்சி வரை அந்;தப் படத்துக்காக செலவிட்டு அந்தப் படத்தைத் தயாரித்தார். அவர் போட்ட கணக்கு ஒரு சதவீதம் கூட தப்பாமல், மாபெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. அதனால் தான் இந்தியப் பட உலகில் செசில் பி டெமிலி என்று இன்று வரையில் போற்றப்படுகிறார் எஸ்எஸ்.வாசன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web