நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்... சிவாஜியை சமாளித்த கமல்..!

 
நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்... சிவாஜியை சமாளித்த கமல்..!
கமல், சிவாஜி இணைந்து நடித்த தேவர் மகன் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இந்தப் படத்தின்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம். கமல் தயாரிப்பில் சிவாஜி நடித்த முக்கியமான படம் தேவர் மகன். அந்தப் படத்தின் இயக்குனர் பரதன். அவருக்கு சிவாஜி நடித்த ஒரு காட்சி திருப்தியா இல்லை. ஆனா அவருக்கிட்ட இன்னொரு முறை நடித்தா நல்லாருக்கும்னு சொல்லத் தயங்கினார். அதனால அந்த விஷயத்தைக் கமலிடம் சொல்கிறார். அதற்கு கமல் என்னன்னு சொல்லி அவரை இன்னொரு முறை நடிக்க சொல்றதுன்னு கமல் கேட்கிறார். எனக்கு என்ன செய்வீங்களோ தெரியாது. ஆனா அவரு இன்னொரு முறை நடித்தா அந்தக் காட்சி நல்லாருக்கும்னு சொன்னாராம். சிவாஜியிடம் அதை எப்படி சொல்வதுன்னு இவர்கள் இருவரும் தவிப்பதைப் பார்த்தார் சிவாஜி. 'என்னப்பா நான் நடிச்சது நல்லாலையா... என்ன சொல்றாரு அவரு?'ன்னு கமலிடம் சிவாஜி கேட்கிறார். சிவாஜியே அப்படிக் கேட்டதும் கொஞ்ச நேரம் தவித்த கமல், 'இன்னொரு டேக் எடுத்தா நல்லாருக்கும்னு பரதன் ஃபீல் பண்றாரு'ன்னு சொன்னார். நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்... சிவாஜியை சமாளித்த கமல்..! TM 'ஏன் நான் நடிச்சது நல்லாலையா'ன்னு சிவாஜி கேட்க, 'ஆமாம்' என்கிற மாதிரி தலையை ஆட்டி இருக்கிறார் கமல். 'என்னவாம்னு கேளு. நான் திரும்ப நடிக்கிறேன்' என்றார் சிவாஜி. அவர் அப்படி சொன்னதும் சூழ்நிலையை மிக அழகாக சமாளித்தவர் தான் கமல். படத்தில் சிவாஜி பெரிய தேவராக நடித்துள்ளார். ஆனால் அந்தக் காட்சியில் சின்னத்தேவராக நடித்தது போல இருந்ததாம். பரதன் இதைச் சொன்னதும் அந்தக் காட்சியில் மீண்டும் நடித்த சிவாஜி அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை எல்லாம் ஒரு படி தாண்டி சிறப்பாக நடித்தாராம். அப்போது யூனிட்டில் உள்ள எல்லாரும் கைதட்டி ரசித்தார்களாம். இப்படி யார் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் நடிக்கும் பெருந்தன்மைக்கு உரியவர் சிவாஜி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  

From Around the web