படம் எடுக்கும்போதே தெரியும் அந்தப் படம் ஓடாது என்று – இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ராம்ஜி கருத்து

 
படம் எடுக்கும்போதே தெரியும் அந்தப் படம் ஓடாது என்று – இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ராம்ஜி கருத்து

துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன்,7 ஜி ரெயின்போ கலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் என அற்புதமான படங்களை கொடுத்தார். திரையுலகில் இவரை அடுத்த மணிரத்னம் என்றே பலர் கூறினர். இவரது இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவான ஒரு வித்தியாசமான படம்தான் இரண்டாம் உலகம் . வித்யாசமான கதை களத்துடன் உருவான அந்த படம், அதன் பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸிற்காகப் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி. பருத்திவீரன்', ஆயிரத்தில் ஒருவன் , மௌன குரு' போன்ற படங்களில் தனது கேமராவால் கலக்கியவர் இவர்

இந்நிலையில் இரண்டாம் உலகம் படம் குறித்த உண்மைகளை ராம்ஜி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இரண்டாம் உலகம் படம் எடுக்கும்போதே அந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. படத்தின் எடிட்டிங் பணிகளின் போதே, இந்தப் படம் வெற்றி பெறுவது கஷ்டம் என்று நான் வெளிப்படையாகவே கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியபோது, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படம் பார்த்த மற்ற அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அனைவரும் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். நானும் அந்தப் படத்திற்காக சுமார் மூன்று ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். எனவே அந்தப் படம் ஓட வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால், இறுதியில் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனக் கூறியுள்ளார்.

From Around the web