ரூட்டை மாற்றிய டிஎஸ்.பாலையா... கதாநாயகன் டூ காமெடியன் ஏன்?

 
TS Balaiyah

தமிழ்சினிமா உலகில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்காங்க. இதுக்கு முன்னாடியும் இருந்து இருக்காங்க. அவங்கள்ல நகைச்சுவை ஜாம்பவான்களும் பலர். அவர்களில் யாராலும் மறக்க முடியாத நடிகர் தான் டிஎஸ்.பாலையா. குலுங்கும் இவரது காமெடியில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள் என்பது நிஜம். வாங்க அவர் பற்றி யாரும் அறியாத தகவல்களைப் பார்க்கலாம்.

நடிகர் டிஎஸ்.பாலையா எப்படிப்பட்ட நடிகர் என்றும் பல்வேறு திரைப்படங்களில் அவர் எப்படிப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார் என்பதும் நாம் அறிந்த விஷயம். ஆனால் பத்மினிக்கு ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்தப் படத்தின் பெயர் வெறும் பேச்சு அல்ல. 1956ல் வெளியானது.

தன் தாயின் வாழ்க்கையைத் தரைமட்டமாக்கிய கயவனை பழிவாங்கும் ஒரு வீரனின் கதாபாத்திரத்தில் அந்தப் படத்தில் டிஎஸ்.பாலையா நடித்து இருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும்போது டிஎஸ்.பாலையாவுக்கு வயது 42. பத்மினிக்கு வயது 22. இதைத் தாண்டிப் பார்த்தா அந்தப் படத்துல டிஎஸ்.பாலையா கொஞ்சம் குண்டாகவே இருப்பார்.

அதனால் ஜோடிப் பொருத்தம் சரியில்லை என்று பல பத்திரிகைகள் அந்தப் படத்தின் விமர்சனத்தில் குறிப்பிட்டு இருந்தன. ஜோடிப்பொருத்தம் சரியாக அமையாததால அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்தப் படம் மட்டும் வெற்றியைப் பெற்றிருந்தால், பல படங்களில் டிஎஸ்.பாலையா தொடர்ந்து கதாநாயகனாக நடித்திருப்பார் என்பது நிஜம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Tags

From Around the web