என்னுடை ஓடாத படமெல்லாம்!... குக் வித் கோமாளி புகழிடம் ஃபன் பண்ணிய அஜித்!...
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடமும் பிரபலமானவர் புகழ். இதன் காரணமாக அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தது. அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் வலிமை. இந்த படத்தில் ஒரு கொலையை விசாரணை செய்ய போலீஸ் அதிகாரி அஜித் வரும்போது அவரோடு புகழும் நடித்திருப்பார். இந்நிலையில், வலிமை படத்தில் நடிக்கும் போது தனக்கும் அஜித்துக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி ஜாலியான ஒரு சம்பவத்தை புகழ் பகிர்ந்து கொண்டார்..
நான் அஜித் சாரிடம் ‘அய்யா காமெடி படம் ஏதாவது பண்ணுங்களேன்.. நானும் உங்க கூட பண்றேன்.. நல்லா இருக்கும்’ என்று சொன்னேன். அதற்கு அவர் ‘நிறைய படம் பண்ணியிருக்கேன் புகழ்’ என்றார். ‘என்ன படம் சார் பண்ணி இருக்கீங்க?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘என்னுடைய ஓடாத படம் எல்லாமே காமெடி படம்தானே’ என்று சொன்னார். அவரின் ஹியூமர் சென்சை பார்த்து அசந்து விட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். அஜித்தின் நகைச்சுவை திறன் குறித்து அவருடன் திரைப்படங்களில் நடித்த பலரும் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று..
ஒருபக்கம், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித்தின் புதிய படம் தற்போது வரை துவங்கப்படவில்லை. அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டாலும் தயாரிப்பாளர் இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அஜித் 185 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு தொகையை அஜித்துக்கு சம்பளமாக கொடுக்க தற்போது யாரும் முன் வரவில்லை என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், அஜித் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் அஜித்.
