ஷங்கர் சார் தயாரிப்பதற்காக காதல் காமெடி கதை சொன்னேன். ஆனா... சுவாரஸ்யத் தகவல் சொன்ன 'குக்கூ' ராஜு முருகன்!

 
Shankar raju murugan

கோலிவுட்டில் 'குக்கூ' என்ற சூப்பர் ஹிட் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ராஜூ முருகன். இவர் இயக்குநராவதற்கு முன்பே பத்திரிக்கையாளராக விகடனில் பணியாற்றி வந்தபோது எழுதிய 'வட்டியும் முதலும்' தொடரும் இவரை ஃபேமஸாக்கியது.

ராஜு முருகன் 'குக்கூ'-விற்கு பிறகு 'ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான், மை லார்ட்' ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில், இவர் கொடுத்த பேட்டியில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் குறித்து பேசுகையில் "'குக்கூ' பண்றதுக்கு முன்னாடி நான் 'சந்திரபாபு'-ங்குற தலைப்புல ஒரு காதல் காமெடி கதை வச்சிருந்தேன்.

அது வந்து 'அட்டகத்தி' படம் டைப்ல இருக்கும். கிராமத்துல இருந்து கிளம்பி சென்னைக்கு வர்ற ஹீரோவுக்கு மூன்று காதல் அவன் லைஃப்ல கிராஸ் ஆகுது. அது தான் ஒன்லைன்.

இந்த கதையை இயக்குநர் ஷங்கர் சார்கிட்ட அவங்க 'S பிக்சர்ஸ்' பேனர்ல பண்றதுக்காக நான் போய் சொன்னேன். அவர் கதையை கேட்டுட்டு, ராஜு முருகன் கதை ரொம்ப நல்லா இருக்கு. 

இதை படமா பண்ணா கண்டிப்பா ஓடிரும். ஆனா, உங்க 'வட்டியும் முதலும்'-லாம் படிச்சுட்டு உங்ககிட்ட இருந்து நான் வேற ஒன்னு எதிர்பார்த்தேன், அது இல்ல இது. அது மாதிரி எதாவது கதை இருந்தா சொல்லுங்கன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நான் எழுதின கதை தான் 'குக்கூ'" என்று கூறியுள்ளார்.

From Around the web