அந்த விஷயத்தில் இளையராஜாதான் எனக்கு முன்னோடி!.. ஓப்பனாக பேசிய இளையராஜா!..

 
ilayaraja


தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி காலத்திலிருந்து இசைத்துறையில் போராடி மேலே வந்தவர்தான் தேனிசை தென்றல் தேவா. சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் பக்தி பாடல்கள் கேசட் போடுவது, தூர்தர்ஷனில் வேலை செய்தது. நாடகங்களுக்கு இசை அமைத்தது என அவர் கடந்து வந்த பாதைகள் ஏராளம்.

பல வருட போராட்டங்களுக்கு பின் வாகை சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த மாட்டுக்கார மன்னாரு படம்தான் தேவாவின் இசையில் வெளியான முதல் திரைப்படம். படம் நன்றாக இருக்கிறது என நல்ல விமர்சனங்களை வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

எனவே தேவாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்து ராமராஜனை வைத்து மனசுக்கேத்த மகராசா என்கிற படத்திற்கு இசையமைத்தார். ஆனால் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் தேவாவுக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பின் கோலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளராக தேவா மாறினார். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தேவா மாறி பல படங்களுக்கும் இசையமைத்தார். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக தேவா இறந்து போனார்.

இந்நிலையில், காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்து பேட்டியில் இளையராஜா பற்றி பேசியிருக்கிறார். நான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாடல்களை கேட்டு வளர்ந்தேன். அதேநேரம் நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் கிராமத்து இசை எனக்கு தெரியாது.. அதை நான் கற்றுக் கொண்டது இளையராஜாவிடம்தான்.. நான் கிராமத்தை பார்த்ததில்லை. இளையராஜா இசையமைக்க துவங்கியபோது நிறைய கிராமத்து படங்கள் வந்தது. அதை பார்த்துதான் கிராமத்து இசை எனக்கு பரிச்சயமானது’ என கூறியிருக்கிறார்./

Tags

From Around the web