சுந்தர்.சி சொல்லியும் கேட்காமல் கார்த்திக் படம் பண்ணி 3 கோடியை இழந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் தனஞ்செயன். இவருடைய தயாரிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 'Mr.சந்திரமௌலி'.
இதை இயக்குநர் திரு இயக்க, 'நவரச நாயகன்' கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் ராம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் "'mr.சந்திரமௌலி' கதையா நல்லா இருந்துச்சு. ஆனா, நான் டைரக்டர் திரு கிட்ட சொன்னேன், இதோட திரைக்கதைல ஒரு மிஸ்டேக் இருக்கு. என்னன்னா, நம்ம வில்லனை வந்து hide பண்ணிட்டே இருக்கோம்.
கடைசில நம்ம reveal பண்றதுக்குள்ள ஆடியன்ஸுக்கு பொறுமை போயிரும். அதுவரைக்கும் படம் entertaining-ஆ இருந்துச்சுன்னா ஓகே, இல்லன்னா பிரச்சனைன்னு சொன்னேன். அதுக்கு திரு, நான் கண்டிப்பா entertaining-ஆ கொண்டு வந்திருவேன் சாருன்னு சொல்லி என்ன convince பண்ணிட்டார்.
அப்புறம் நான் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி சார்கிட்ட இந்த கதையை சொல்லி opinion கேட்டேன். அவர் கதையை கேட்டுட்டு, சார் இது ரிஸ்க்கா தெரியுது வேண்டாம் பண்ணாதீங்கன்னு சொன்னார். ஆனா, நாங்க அப்பவே அந்த படத்துல வொர்க் பண்ற நிறைய பேருக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு.
இப்போ உடனடியா படத்தை டிராப் பண்ண முடியாது. உடனே, நான் மறுபடியும் திரு கிட்ட பேசுனேன். நானும் அவரும் சேர்ந்து திரைக்கதைல இப்படி பண்ணலாமா, அப்படி பண்ணலாமான்னு டிஸ்கஸ் பண்ணி படத்தை எடுத்து முடிச்சுட்டோம். படத்தை எடிட் பண்ணி பாக்கும்போதே திரு கிட்ட சொன்னேன், நான் பெருசா மாட்டிக்கிட்டேன்னு.

ஆனாலும், அந்த படத்துக்கு நல்லா புரொமோஷன் பண்ணி, 320 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணேன். படம் பெரிய அடி வாங்குச்சு. முதல்ல எனக்கு தப்புன்னு பட்டுச்சுல, அதுவும் சுந்தர்.சி சார் சொல்லியும் கேக்காம நான் இந்த கதைய படமா பண்ணேன். அதுமட்டும் பண்ணாம போயிருந்தா நான் ஒரு 3 கோடி save பண்ணியிருப்பேன். எனக்கு இவ்ளோ பெரிய loss வந்திருச்சேன்னு, ஆறு மாசம் நிம்மதி போச்சு, தூக்கம் போச்சு . அப்படி அந்த படத்துனால நான் நிறைய இழந்தேன். அதுக்கப்புறம் நான் opinion கேக்காம எந்த படமும் பண்ண மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
