தனுஷுக்கு சினிமாவே பிடிக்காது!.. விட்ருங்கன்னு அழுவார்!.. கஸ்தூரி ராஜா சொன்ன பிளாஷ்பேக்!..

 
dhanush

தமிழில் சில படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். வெங்கட் பிரபு என்பது ஒரு உண்மையான பெயர். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானபோது அவரின் பெயர் மாற்றப்பட்டது.  அதன்பின் திருடா திருடி, காதல் கொண்டேன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து கவனிக்கத்தக்க ஒரு நடிகராக மாறினார்.

பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகராகவும் மாறினார். கமர்சியல் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் தனுஷ் நடித்து வருகிறார்..

ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என கலக்கி வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் இயக்கம் என ஓடிக் கொண்டிருக்கிறார் தனுஷ்..

இந்நிலையில், ஒரு திரைப்பட விழாவில் பேசிய தனுஷின் தந்தை மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா ‘ஆரம்பத்தில் தனுஷுக்கு சினிமாவை பிடிக்காது.. செல்வராகவன் மட்டுமே விரும்பி சினிமாவுக்கு வந்தார்.. ஆனால் தனுஷ் அப்படி இல்லை.. சூழ்நிலை காரணமாக நடிக்க வந்தார்.. துள்ளுவதோ இளமை படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் ஷூட்டிங்கிற்கு அழுது கொண்டே வருவார். ‘என்னை விட்ருங்க.. நான் போயிடுறேன்’ என சொல்லிகொண்டே இருப்பார். ஐந்தாறு படங்கள் நடித்த பிறகுதான் சினிமாவில் அவருக்கு ஆர்வமே வந்தது..இன்று அவர் அடைந்துள்ள உயரம் பெருமையாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

Tags

From Around the web