விக்ரமின் 'பீமா'ல அதை மட்டும் மாற்ற வேண்டுமென ஆசைப்பட்ட துருவ்... சுவாரஸ்யத் தகவல் சொன்ன லிங்குசாமி!

தமிழ் சினிமாவில் 'ஆனந்தம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் லிங்குசாமி. இவர் இயக்கிய ஐந்தாவது படமான 'பீமா' 2008-ஆம் ஆண்டு வெளிவந்தது.
 
vikram dhruv bheemaa

தமிழ் சினிமாவில் 'ஆனந்தம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் லிங்குசாமி. இவரின் பக்கா கமர்ஷியல் படங்களான 'ரன், சண்டக்கோழி, பையா'-வுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் இயக்கிய ஐந்தாவது படமான 'பீமா' 2008-ஆம் ஆண்டு வெளிவந்தது. 'சீயான்' விக்ரம், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ரகுவரன் நடித்த இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ஏமாற்றத்தை தந்தது.

சமீபத்தில், லிங்குசாமி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் 'பீமா' குறித்து பேசுகையில் "இந்த படத்தின் மேக்கிங் நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. ஆனால், படம் நான் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

அதுக்கான காரணம் இதோட க்ளைமேக்ஸ் தான். ஒரு 10 நிமிஷத்துல த்ரிஷா, விக்ரம், பிரகாஷ் ராஜ்-ன்னு எல்லாருமே சாவாங்க. அது ஆடியன்ஸை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. விக்ரம் சார், 'பீமா' என்னோட மகன் துருவ்வுக்கு ரொம்ப பிடிச்ச படம்ன்னு சொல்லிட்டே இருப்பார். அப்பா, இந்த படத்தை நான் திரும்பவும் எடுத்தா, அதன் க்ளைமேக்ஸை மட்டும் மாற்றி எடுப்பேன்னு துருவ் அவர்கிட்ட சொல்லுவாராம்" என்று கூறியுள்ளார். 
 

From Around the web