தமிழ்சினிமாவில் நடந்த வித்தியாசமான புரொமோஷன்... மாஸ் காட்டிய ஏவிஎம்!
தமிழ்சினிமாவுல வித்தியாசமான விளம்பரங்களைப் பண்றதை முதலில் ஆரம்பிச்சி வச்சதுன்னா அது எஸ்எஸ்.வாசன். அவருடைய சந்திரலேகா படத்தில் தான் அது தொடங்கியது. அதுக்குப் பின்னால ஏவிஎம் நிறுவனத்தினர் பல படங்களில் அதைத் தொடர்ந்தனர். குறிப்பாக சொல்லணும்னா அவங்க மின்சார கனவு படத்துக்கு செய்த விளம்பரம்.
அந்தப் படம் ஆரம்பத்துல மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. அந்தப் படத்தோட தான் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் உருவான பெரிய தம்பி படம் வெளியானது. அந்தப் பொங்கல் அன்று முதன் முதலில் வெற்றி பெற்றது பிரபு நடித்த பெரிய தம்பி தான். ஆனால் ஏவிஎம் நிறுவனம் செய்த தொடர் விளம்பரங்கள் காரணமாக பெரிய தம்பியை முந்தி ஒரு வெற்றியை மின்சாரக் கனவு படம் பெற்றது.
அந்தப் படத்துக்காக ஒரு ட்ரெயினையே விட்டாங்க. ட்ரெயின் முழுக்க மின்சார கனவு பற்றிய விளம்பரம். அந்த ட்ரெயின்ல திருநெல்வேலியில் இருந்து திரை ரசிகர்களை சென்னைக்கு கூட்டிக்கொண்டு வந்து படப்பிடிப்புகளை எல்லாம் காட்டி திரும்ப அவர்களை வழியனுப்பி வைத்தார்கள். சன்டிவியோடு இணைந்து ஏவிஎம் நிறுவனம் நடத்திய அந்தப் புரொமோஷன் அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது.
