நான் டைரக்டராக தனுஷ்தான் காரணம்... ஓங்கி அடித்த கென் பேச்சு!

 
ken, dhanush

தன்னுடைய முதல் படத்திலேயே இயக்கத்திலும்இ நடிப்பிலும் வென்ற பார்த்திபனைப் போலவே இன்னொரு நடிகர் தான் கருணாஸ் மகன் கென் கருணாஸ். இன்றைக்கு ஒரு நடிகராகவும்இ இயக்குனராகவும் நான் ஜெயிச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் வெற்றிமாறன் தான் என்கிறார் கென். அசுரன் படத்திலே அப்படி ஒரு அற்புதமான கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு வெற்றி மாறன் தராமல் இருந்து இருந்தால் நிச்சயமாக என்னைப் பற்றி மக்களுக்கு தெரிந்தே இருக்காது.

அப்படின்னு கூட நான் சொல்வேன். அந்த கதாபாத்திரத்திலே நடிக்க வைக்க பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் அதை எல்லாம் மீறி அந்த கதாபாத்திரத்திலே அவர் என்னை நடிக்க வைத்தார் என்று பின்னாளில் நான் கேள்விப்பட்டேன். அந்த படத்தில் நடிக்கும்போது இயக்கத்தில் எனக்கு எப்படிப்பட்ட ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டுகொண்ட வெற்றிமாறன் தன்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

அதன் காரணமாகத்தான் இன்றைக்கு யூத் என்ற வெற்றிப்படத்தை என்னால் கொடுக்க முடிந்தது. இந்த இடத்துல இன்னொருவரைப் பற்றியும் முக்கியமாக சொல்லியே ஆக வேண்டும். அவர் தனுஷ். ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்று நான் சொன்ன உடனே தைரியமாக வா கென். நான் இருக்கேன். பார்த்துக்கலாம் என்று தைரியம் ஊட்டியவர் தனுஷ். இன்றைக்கு வெற்றிகரமான ஒரு இயக்குனராக நான் இருப்பதற்கு தனுஷ் உடைய நம்பிக்கை ஊட்டிய அந்த வார்த்தைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் கென் கருணாஸ். 

Tags

From Around the web