கிராமிய மணம் முதல் அதிரடி ஆக்சன் வரை: இயக்குனர் மனோஜ் குமார் இயக்கிய படங்கள்- ஒரு பார்வை!

 
கிராமிய மணம் முதல் அதிரடி ஆக்சன் வரை: இயக்குனர் மனோஜ் குமார் இயக்கிய படங்கள்- ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் பெயர் பெற்றவர் இயக்குனர் மனோஜ் குமார். பாரதிராஜாவின் உறவினர் மட்டுமல்லாமல் அவரது பாசறையில் இருந்து வந்து, முத்திரை பதித்த இவரது இயக்கத்தில் 16 திரைப்படங்கள் வெளிவந்துள்ளனர். அப்படங்கள் வெற்றி தோல்வி குறித்து இங்கே காணலாம்.

  1. வானவில் (2000) -
    ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த இப்படம், மனோஜ் குமாரின் கேரியரில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். அர்ஜுன் - அபிராமி இடையிலான எமோஷனல் காட்சிகள் மற்றும் பிரகாஷ்ராஜின் நடிப்பு படத்திற்குப் பலம் சேர்த்தது. 125 நாட்களைக் கடந்து ஓடி, 4 மாநில விருதுகளையும் அள்ளியது.

  1. மருதுபாண்டி (1990) -
    ராம்கி, சீதா, நிரோஷா நடிப்பில் உருவான கிராமிய பின்னணி கொண்ட படம். இளையராஜாவின் இசை படத்திற்குப் பெரும் பலம். 100 நாட்களுக்கு மேல் ஓடி, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது.
  2. பாண்டிதுரை (1992) -
    பிரபு - குஷ்பூ ஜோடியின் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வந்த இப்படம், குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்றும் பிரபலம். 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் சாதனை படைத்தது.
  3. சாமுண்டி (1992) -
    சரத்குமாரை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாகச் செதுக்கிய படம். தேவாவின் இசை மற்றும் கவுண்டமணியின் நகைச்சுவை படத்திற்குப் கூடுதல் பலம். 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது.
  4. குரு பார்வை (1998) -
    பிரகாஷ்ராஜ் நாயகனாக மிரட்டிய படம். குஷ்பூ, ஈஸ்வரி ராவோ எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருந்தது. ஒரு மாறுபட்ட திரைக்கதையால் 115 நாட்களைக் கடந்து சூப்பர் ஹிட் ஆனது.
  5. பச்சக்கொடி (1990) -
    பாண்டியராஜன் மற்றும் நிரோஷா நடிப்பில் கங்கை அமரனின் இசையில் உருவான இப்படம், ஜனரஞ்சகமான வெற்றியைப் பெற்றது. 100 நாட்களைக் கடந்து ஓடி லாபகரமான படமாக அமைந்தது.
  6. வெள்ளைய தேவன் (1990) -

ராம்கி - கனகா நடிப்பில் இளையராஜாவின் இசையில் உருவான இப்படம், 75 நாட்களைக் கடந்து ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டித் தந்தது.

  1. நேரம் நல்லாயிருக்கு (1987) -

ராமராஜன் ஹீரோவாக நடித்த ஆரம்பகாலப் படம். எம்.எஸ்.வி இசையில் பாடல்கள் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது. சுமாரான வெற்றியை பெற்றது இப்படம்

  1. செந்தமிழ்ச்செல்வன் (1994) -

பிரசாந்த் - மதுபாலா நடிப்பில் வெளியான இப்படம், எம்.எஸ்.வி மற்றும் இளையராஜா என இரு பெரும் இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்தனர். பாடல்கள் நன்றாக இருந்தும் படம் தோல்வியை சந்தித்தது.

  1. மறவன் (1993) -
    பிரபு மற்றும் குஷ்பூ மீண்டும் இணைந்த இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தேவாவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன. படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
  2. ராஜபாண்டி (1994) -
    சரத்குமார் - சுகன்யா நடிப்பில் உருவான இப்படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஆனால் பாடல்கள் இன்று வரை பிரபலம்.
  3. ராஜ்ஜியம் (2002) -

கேப்டன் விஜயகாந்த் மற்றும் மலையாள நடிகர் திலீப் நடிப்பில் வெளியான இப்படம், 70 நாட்கள் வரை ஓடியது. கலவையான விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

  1. வண்டிச்சோலை சின்ராசு (1994) -

சத்யராஜ் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஒரே படம் இதுதான். பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும், படம் 50 நாட்களை மட்டுமே கடந்து சுமாரான வெற்றியைப் பெற்றது.

  1. மண்ணுக்குள் வைரம் (1986) -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முரளி நடிப்பில் உருவான இப்படம், 50 நாட்கள் ஓடி சுமாரான வரவேற்பைப் பெற்றது. பாடல்கள் சூப்பர் ஹிட ஆகியது.

  1. ஜெய் சூர்யா (2004) -

அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம், வடிவேலுவின் நகைச்சுவைக்காகப் பேசப்பட்டது. 50 நாட்கள் ஓடி சுமாரான படமாக அமைந்தது.

  1. உயிருக்கு உயிராக (2014) -

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மனோஜ் குமார் இயக்கிய இப்படம், புதிய கலைஞர்களைக் கொண்டு உருவானது. ஆனால், இது மக்கள் மத்தியில் எடுபடாமல் தோல்வியைச் சந்தித்தது.

From Around the web