தியேட்டர் சீட்லயே ஒன்னுக்கு போயிட்டேன்!... மிஷ்கின் ஓப்பன் பேட்டி!...
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதன்பின் அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு 2, டிரெயின் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் மிஷின் இயக்கினார். விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. ஒருபக்கம் பல திரைப்படங்களிலும் மிஷ்கின் நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினை விட நடிகர் மிஷ்கின் பிஸியாக இருக்கிறார்.
அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சிறுவயதில் பார்த்த பேய் படங்கள் பற்றி கருத்து தெரிவித்த மிஷ்கின் ‘சின்ன வயசுல ஜகன் மோகினி படம் பார்த்து தியேட்டர் சீட்லயே மூத்திரம் அடிச்சிட்டேன்.. அப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும்.. பேய் படம்நாளே பயம் பயம் அப்படின்னு இருந்தது..
பேய்னா திடீர்னு வந்து கத்துறது.. திடீர்னு பயமுறுத்துறது.. இதுவெல்லாம் எனக்கு தெரியாது.. ஒரு பேய் கொடியதுன்னு அப்படிங்கறது எண்ணம் இருக்கு.. அது ஏன் அப்படி இருக்கணும்? ஏன் ஒரு கடவுளா இருக்க கூடாது? என எனக்கு தோன்றியது. அதனால்தான் பிசாசு படத்துல பேயை ஒரு தேவதையை போல கடவுளாக காட்டினேன்’ எனக் கூறியிருக்கிறார்.
