மின்சாரக்கண்ணா படப்பிடிப்பில் அசத்திய விஜய்... ஆச்சரியமாய் சொன்ன இயக்குனர்!

 
minsara kanna

நடிகைகளும், இயக்குனர்களும் விஜயைப் பற்றிப் பேசும்போது அவர் அடக்கமானவர். யாருக்கிட்டயும் அதிகமா பேச மாட்டார். ஷாட் முடிஞ்சதுன்னா ஓரமா போய் உட்கார்ந்துருவாரு. ஏதாவது புத்தகத்தைப் படிப்பார். அல்லது எங்கேயாவது பார்த்தபடி இருப்பார். அப்படின்னுதான் நம்மகிட்ட கருத்து சொல்லிருக்காங்க. ஆனால் விஜயைப் பொருத்தவரைக்கும் இதுக்கு நேர்மாறான குணங்களும் அவர்கிட்ட உண்டு என்று இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார்.

மின்சார கண்ணா படத்தை இயக்கியவர் கேஎஸ்.ரவிக்குமார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், ஊட்டியிலும் நடைபெற்ற போது, அடக்க ஒடுக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் விஜய். ஆனால் அதே படப்பிடிப்பில் பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது சுவிட்சர்லாந்து சென்ற போதுதான் விஜய் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரிந்தது.

பஸ்ல எங்கக்கூட தான் தினமும் படப்பிடிப்புக்கு வருவார். அப்போ அவருக்கிட்ட நீங்க பாடி இந்தப் பஸ்ல ஆடணும். எங்களை எல்லாம் உற்சாகப்படுத்தணும்னு கேட்டபோது, அதுதான் படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சே. இனிமே ஆடலாம். பாடலாம் என்று சொன்னவர் எல்லா பயணத்தின் போதும் அவ்வளவு அற்புதமாகப் பாடினார். ஆடினார். எங்களை மகிழ்வித்தார். மின்சாரக்கண்ணாவைப் பற்றி எப்போ நினைச்சாலும் அந்தப் பயணம்தான் என் நினைவுக்கு வரும் என்று கேஎஸ்.ரவிக்குமார் அந்தப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Tags

From Around the web