ரசிகர்கள் பற்றி இயக்குநர் சரண் கேட்ட கேள்வி... சூப்பரான பதிலை சொன்ன ரஜினி!

 
saran rajinikanth

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் தான் சரண். இவர் 'தல' அஜித்குமாரை வைத்து 'காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல்' ஆகிய படங்களை இயக்கினார்.

இது தவிர 'உலக நாயகன்' கமல்ஹாசனின் 'வசூல் ராஜா MBBS', 'சீயான்' விக்ரமின் 'ஜெமினி', மாதவனின் 'ஜேஜே', பிரஷாந்தின் 'பார்த்தேன் ரசித்தேன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார்.

இயக்குநர் சரண் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை நேரில் சந்தித்த தருணம் குறித்து பேசுகையில் "நான் ரஜினி சாரை நேரில் சந்தித்தபோது அவரிடம், எல்லா 'சூப்பர் ஸ்டார்'-களுக்கும் பொருந்தும் வகையில் ஒரு கேள்வியை கேட்டேன்.

ஒரு ஸ்டாரோட படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளன்று, அவங்க ரசிகர்களோட எண்ணம் முழுக்க அந்த ஹீரோ மீது தான் குவிந்திருக்கும். அந்த தாக்கத்தை உங்களால ஃபீல் பண்ண முடியுமா? சாருன்னு கேட்டேன். அதற்கு ரஜினி சார், கண்டிப்பா முடியும். எனக்கு அந்த vibration வரும்ன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web