கதாநாயகனைத் தேடி அலைந்த ஸ்ரீதர்... இன்ப அதிர்ச்சி கொடுத்த இசை அமைப்பாளர்கள்!
ஸ்ரீதர் தமிழ்சினிமா உலகில் எப்படிப்பட்ட டைரக்டர் என்பது யாவரும் அறிந்ததே. அவரது இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்தப் படத்தை இந்தியில் எடுக்க நினைத்தார் ஸ்ரீதர். அப்போது அவருக்கு ரவிச்சந்திரன் கேரக்டரில் இந்தியில் யாரை நடிக்க வைப்பது என்ற எண்ணம் தோன்றியதும் அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தவர் சசிகபூர். அவர் தான் அப்படி துருதுருவென இருப்பார்.
அடுத்து அவர் முத்துராமன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தார். அது ஒரு முதிர்ச்சியான கேரக்டர். அந்தப் பாத்திரத்தில யாரை நடிக்க வைக்கலாம்னு நினைத்தார். ஆனால் யாரும் செட்டாகவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் தான் அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லட்சுமிகாந்த், பியரிலாலைப் பார்ப்பதற்காக அவர்களுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போனார். அப்போது லட்சுமிகாந்த், பியரிலால் இருவரும் ஒரு படத்தின் ரஷ்ஷைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஸ்ரீதர் வந்துருக்காருன்னதும் அவரை வெளியில் காக்க வைக்காமல் உள்ளே வரச் செய்தனர். அவரும் அங்கு அவர்கள் பார்த்த படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் பார்த்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்து இருந்தார் கிஷோர். படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். அவரது துருதுருப்பான நடிப்பைப் பார்த்த உடனே, நாம தேடிக்கிட்டு இருந்த முத்துராமன் கதாபாத்திரத்தில் நடிக்க இவர்தான் சரியான ஆள் என்று முடிவெடுத்து விட்டார் ஸ்ரீதர்.
படத்தின் ரஷ்ஷைப் பார்த்த இசை அமைப்பாளர்கள் ஸ்ரீதரிடம், ரொம்ப நேரமாக காக்க வைத்ததற்கு மன்னிச்சிக்கோங்க என்றனர். என்னை நீங்க காக்க வைத்தது ரொம்ப நல்லதா போச்சு. என்னுடைய படத்தில் 2வது கதாநாயகனைத் தேடிக் கொண்டு இருந்தேன். நீங்க காக்க வைத்தது நல்லதாப் போச்சு. அதனால் இப்போ எனக்கு நான் தேடிய 2வது கதாநாயகன் கிடைத்து விட்டார். உங்களுக்கு நன்றின்னு சொல்லிவிட்டுப் போனாராம் ஸ்ரீதர்.
