நடக்க முடியாத நிலையிலும் எம்ஜிஆர் நிகழ்த்திய அற்புதம்… நட்புக்கு இலக்கணம் இவர் தான்!

 
நடக்க முடியாத நிலையிலும் எம்ஜிஆர் நிகழ்த்திய அற்புதம்… நட்புக்கு இலக்கணம் இவர் தான்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழைப் பற்றிச் சொல்லணும்னா சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒரு தரமான சம்பவம் குறித்துப் பார்ப்போம்.

படத் தயாரிப்பாளரும், ஸ்டூடியோ அதிபருமான நாகிரெட்டியாரின் பேரனின் திருமணம். நாகிரெட்டிக்கும், எம்ஜிஆருக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது? எப்படிப்பட்ட நட்பு இருந்தது? என்பது எல்லாருக்கும் தெரியும்.

அந்தத் திருமணத்தைப் பொருத்தவரை எம்ஜிஆர் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய விழா. ஆனால் அந்த நேரத்தில் எம்ஜிஆர் எழுந்து நடமாடக் கூடிய சூழ்நிலையில் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாராக இருந்தாலும் என்ன செய்வாங்க?

உடனடியாக, நாகிரெட்டியாரை போனில் அழைத்து ''நான் நிச்சயமா வரணும்னு தான் இருந்தேன். உடல்நிலை சரியில்லை. எழுந்து நடக்கவே முடியாத சூழ்நிலையில இருக்கேன். அதனால மணமக்களுக்கு என்னுடைய ஆசியைக் கூறுகிறேன். முடிஞ்சா திருமணம் முடிந்த பிறகு அவர்களை என்னோட வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள்" அப்படின்னு தானே சொல்வாங்க. ஆனா எம்ஜிஆர் அப்படி சொல்லல.

மாறாக நாகிரெட்டியாருக்குப் போன் பண்ணி, ''என்னால எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில நான் இருக்கேன். அதனால திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் எல்லாம் வந்து போனதுக்குப் பின்னால ஒரு பத்து மணி அளவில் நான் வருகிறேன்" என்று சொல்லி சக்கர நாற்காலியில் போய் அந்தத் தம்பதிகளை வாழ்த்தி இருக்கிறார் எம்ஜிஆர். நட்புக்கு எம்ஜிஆர் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்குப் பல சம்பவங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இது. மேற்கண்ட தகவலைச் சொன்னவர் எம்ஜிஆருடன் நெருக்கமாகப் பழகக்கூடிய பத்திரிகையாளருள் ஒருவரான பொம்மை சாரதி.

From Around the web