முதல் படத்திலேயே சாதனை படைத்த ஜெய்சங்கர்... யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு?

 
jaisankar

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நூற்றுக்கணக்கான படங்கள்ல நடித்து இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையைப் பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல பேர் விமர்சனம் செய்தது உண்டு. அவர் எப்படிப்பட்ட நடிகர் என்று எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால் அவரது முதல் படமே சான்று என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நடித்த முதல் படம் இரவும் பகலும். முதல் படத்திலேயே மிகச்சிறப்பாக நடித்து இருந்ததற்காக பேசும்படம் பத்திரிகை இந்த மாத நட்சத்திரம் என்று அவரைத் தேர்ந்தெடுத்தது. அது மட்டும் அல்லாமல் அவர் நடிப்பை அப்படி பாராட்டியது.

1965ம் ஆண்டு திரை உலகில் காலடி எடுத்து வைத்த அவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர். இரவும் பகலும் அவரது முதல் படம். ஆனாலும் அந்தப் பண்பட்ட நடிப்பை இவரிடம் நாம் காண முடிகிறது. காதல் காட்சிகளில் நளினத்தையும் சண்டைக் காட்சிகளில் வேகத்தையும் இந்தப் படத்தில் காட்டியது. பந்தைப் போல தாவிக் குதித்து போடும் இவரது சண்டைக் காட்சிகள் எதிர்காலத்தில் மக்கள் இதயத்தில் இவருக்கு நிரந்தரமாக இடம் இருக்கும் என்று காட்டியது.

சோகக்காட்சிகளிலும் ஜெய்சங்கர் சோடை போகாமல் நடித்து இருக்கிறார். ஜெய்சங்கரது நடிப்புத் திறமைக்காக இந்த மாத நட்சத்திரம் என்று பேசும்படம் பத்திரிகை ஒரு பாராட்டுச் சான்றிதழை அந்தக் காலத்திலேயே வாசித்துக் கொடுத்தது. முதல் படத்திலேயே தான் எப்படிப்பட்ட நடிகர் என்று நிரூபித்தவர் தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். 
 

Tags

From Around the web