'தசாவதாரம்' படத்தை டைரக்ட் பண்ணுங்கன்னு கமல் சார் சொன்னபோது நான் பயந்தேன்... ஓப்பனாக சொன்ன இயக்குநர் கெளதம் மேனன்!

 
Kamal Haasan Gautham Menon Dasavathaaram Movie

'உலக நாயகன்' கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த படம் 'தசாவதாரம்'. இதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தை முதலில் இயக்கவிருந்தது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான்.

அதன் பிறகு இவர் கமலை வைத்து 'வேட்டையாடு விளையாடு' படத்தை இயக்கினார். சமீபத்தில், கெளதம் மேனன் கொடுத்த பேட்டியில் 'தசாவதாரம்' படம் குறித்து பேசுகையில் "நான் கமல் சாரை மீட் பண்ணி 'வேட்டையாடு விளையாடு' படத்தோட ஐடியா மட்டும் சொன்னேன்.

அவருக்கு அது ரெகுலரான ஒரு போலீஸ் படம் மாதிரி தான் அப்போ ஃபீல் ஆச்சு. அதுனால, அவர் வேற ஏதாவது புதுசா பண்ணலாம்ன்னு சொல்லி 'தசாவதாரம்' படத்தோட ஐடியாவைச் சொன்னார். ஒரு 15 நாட்கள் டிஸ்கஷனும் போச்சு. 

Dasavathaaram movie

ஆனா, ஒரு நடிகர் 10 ரோல்ஸ்ல பண்ணனும்ன்னு சொன்னபோது நான் உண்மையாவே பயந்தேன். ஏன்னா, எனக்கு டபுள் ஆக்ஷன் படங்களே பிடிக்காது. அதுமட்டுமில்லாம, டபுள் ஆக்ஷன் ஷூட் பண்றதே கஷ்டம், இதுல 10 ரோல்ஸ் வேற, அதுனால என்னால கண்டிப்பா நீங்க எதிர்பாக்குற அளவுக்கு பண்ண முடியாது சாருன்னு சொன்னேன்.

நான் முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி கொடுத்திருவேன், நீங்க தைரியமா டைரக்ட் பண்ணுங்கன்னு கமல் சார் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனா, நான் பண்ணல சாருன்னு சொல்லிட்டேன். ஒரு 4 மாசம் நான் இல்லாம 'தசாவதாரம்' ஸ்டோரி டிஸ்க்ஷன் அவரோட ஆபிஸ்ல போயிட்டு இருந்துச்சு.

Vettaiyaadu Vilaiyaadu Movie

அப்புறமா கமல் சார் எனக்கு போன் பண்ணி இப்போ உங்ககிட்ட என்ன ஸ்கிரிப்ட் இருக்குன்னு கேட்டார். நான் அந்த 'வேட்டையாடு விளையாடு' ஐடியாவை டெவலப் பண்ணி முழு ஸ்கிரிப்ட்டும் ரெடி பண்ணிட்டேன் சாருன்னு சொன்னேன். ஓகே நாளைக்கு மீட் பண்ணுவோம்ன்னு சொன்னார். அதுக்கப்புறமா 'வேட்டையாடு விளையாடு' படத்தை பண்ணினோம்" என்று கூறியுள்ளார்.

From Around the web