'நடுநிசி நாய்கள்' ரிசல்ட் தெரிஞ்சே தான் பண்ணேன்... ஓப்பனாக பேசிய GVM!

 
Nadunisi Naaygal Gautham Vasudev Menon

ஸ்டைலிஷான காதல் மற்றும் ஆக்ஷன் படங்களை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நிறைய நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் சற்று வித்தியாசமாக ஒரு சீரியல் கில்லர் கேரக்டரை சுற்றி கதைக்களம் அமைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் 'நடுநிசி நாய்கள்' என்ற படத்தையும் எடுத்தார்.

2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் சீரியல் கில்லராக வீரா நடிக்க, முக்கிய ரோல்களில் சமீரா ரெட்டி, உதய் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தார்கள். இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி எடிட்டராக பணியாற்றியிருந்தார். ஆடியன்ஸ் கௌதமிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, அதனால் இது தோல்விப்படமானது.

சமீபத்தில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "'நடுநிசி நாய்கள்' வந்து complete-ஆ ஒரு experimental படம் தான். 'விண்ணைத்தாண்டி வருவயா' படத்துக்கு அப்புறம் தான் இந்த படம் பண்ணேன்.

Nadunisi Naaygal

இதை ஒரு கோடி பட்ஜெட்டுக்குள்ள ஷூட் பண்ணி முடிச்சோம். இந்த படத்துல songs & background score கிடையாது. வெறும் sound effects மட்டும் தான். ரொம்ப டெக்னிக்கலா வொர்க் பண்ணோம். இந்த மாதிரி ஜானர் படங்களை சில பேர் தான் விரும்பி பார்ப்பாங்க.

சோ, நாங்க அதோட ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சே தான் பண்ணோம். அதுக்குண்டான publicity மட்டும் பண்ணி ரிலீஸ் பண்ணோம். படத்தோட ரிலீஸ் அன்னைக்கு 4 shows-ம் full ஆச்சு. ஆனா, ரெண்டாவது நாள்ல இருந்து தியேட்டர்ல ஆடியன்ஸ் வரல. படமும் மூன்றே நாட்கள்ல தியேட்டர்ல இருந்து எடுத்துட்டாங்க" என்று கூறியுள்ளார்.

From Around the web