கண்ணதாசனின் தத்துவ கவிதைகளைக் கேட்டு அசந்து போன தயாரிப்பாளர்... அட அவரா?
தெலுங்கு பட உலகின் சூப்பர்ஸ்டாரான என்டி.ராமராவ் முதற்கொண்டு பல முக்கியமான நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜயாவாகினி ஸ்டூடியோ அதிபரான பி.நாகிரெட்டியாருக்கு உண்டு. தன்னுடைய ஸ்டூடியோவிலே அறிமுகமான நடிகர்களைப் பற்றி கூறும்போது என்.டி.ராமராவ் எங்களுடைய ஸ்டூடியோவில் வேலை பார்த்தவர்தான்.
அதற்கு பின்னாலே தன்னுடைய கடும் உழைப்பின் காரணமாக சினிமா உலகிலே மிகப்பெரிய இடத்திற்கு வந்தார். அவரை வைத்து நாங்கள் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்து இருக்கிறோம். எஸ்.வி.ரங்காராவும் எங்களது தயாரிப்புதான். அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை தருவார்கள்.
இதுதான் எங்களது முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது. நாங்க கொடுத்து அனுப்புகின்ற வசனங்களை எல்லாம் வீட்டில் முழுசா ஒத்திகைப் பார்த்துட்டு தான் மறுநாள் நடிகர்கள் படப்பிடிப்பு செட்டுக்கு வருவார்கள். இப்ப அதை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ள நாகிரெட்டியாருக்கு பிடித்தமான இசை அமைப்பாளர் என்றால் கண்டசாலா, கேவி.மகாதேவன், எம்எஸ்.சுசனா ஆகிய மூவரையும் சொல்லலாம். சங்கராபரணம் படத்தை அதனுடைய பாடலுக்காகவே நான் பலமுறை பார்த்தேன்.
இந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனைப் பற்றியும் நான் சொல்லியே ஆகணும். அவர் ஒரு ஜீனியஸ். அவரோடு பணியாற்றும்போது அவர் சொன்ன தத்துவ கவிதைகளை எல்லாம் கேட்டு நான் பலமுறை அசந்து போயிருக்கிறேன் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார் நாகிரெட்டியார்.
