ஐஸ்வர்யாராய் உலக அழகியாக இதுதான் காரணமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!

 
Iswarya rai

ஐஸ்வர்யாராய் இந்திய திரை உலகில் கொடிகட்டிப் பறந்ததற்கும், உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் யார் காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அவரது கல்லூரி பேராசிரியர் தான் இவை எல்லாவற்றிற்கும் விதை போட்டவர். ஐஸ்வர்யாராய் முதலாம் ஆண்டில் ஆர்க்கிடெக்ட் படிப்பு படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பேராசிரியர், இவ்வளவு அழகா இருக்கே. நீ ஏன் மாடலிங் செய்யக்கூடாது என்று ஐஸ்வர்யா ராயைப் பார்த்துக் கேட்டார். அவர் அப்படி கேட்ட உடனே ஐஸ்வர்யாராய்க்கு சிரிப்பு தான் வந்ததாம்.

அதுக்கு அப்புறம் நாம் ஏன் மாடலிங் துறையில் முயற்சி பண்ணிப் பார்க்கக்கூடாது என்று ஐஸ்வர்யாராய்க்குத் தோன்றியது. அதனால் வீட்டில் உள்ள எல்லோரிடமும் கேட்க, அவர்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லையாம். அதற்குப் பின் போராடி, அவர்கள் எல்லோரையும் ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறார். மாடலிங் எல்லாம் பண்ணலாம்னு சொன்ன பேராசிரியர் சும்மா இருக்கல. அவருக்குத் தெரிந்த விளம்பர ஏஜென்சிகள் எல்லோரிடத்திலும் ஐஸ்வர்யாராயை அறிமுகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு விளம்பரப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதுதான் ஸ்டார்ட். அதுக்குப் பிறகு தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. அவரது விளம்பரம் டிவியில் வந்ததைப் பார்த்து ஒரு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. ஆனால் அந்த காலகட்டத்திலே பட வாய்ப்புகள் வந்தபோது ஐஸ்வர்யாராய் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால்தான் திரைப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டார் ஐஸ்வர்யாராய். 

Tags

From Around the web