அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

 
அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?
90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாம். படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு இவர் தான் ஜோடி. கமலிடம் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் இருந்து தெரியாத யாரையாவது தனது ஜோடியாகக் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த ரோலில் நடிக்க கௌதமி, சங்கீதா, சுஹாசினி உள்பட பலரும் மறுத்து விட்டார்களாம். கடைசியாக ஹீரா இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். 90களின் மத்தியில் வந்த மீனா, தேவயாணி, சுவலட்சுமி ஆகியோர் புடவைகளில் வந்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர். இந்த இழுப்பால் ஹீராவின் மார்க்கெட் முடிந்து போனது. அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா? KK அதன் பிறகு அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. காதல் கோட்டையில் அஜீத்துடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது. அவ்வை சண்முகியில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அஜீத்துடன் ஹீராவுக்கு பயங்கரமான காதல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்தாராம். அதைத் தொடர்ந்து பெங்களூருவுக்கு சென்று விட்டார். அங்கு கன்னடம், தெலுங்கு படங்களில் 2வது கதாநாயகியாக நடித்தார். கே.எஸ்.ரவிகுமார் அவரை அழைத்து சுயம்வரத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து கார்த்திக் நடித்த பூவேலி பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்புகிறார் என கூறப்பட்டது. ஆனால் கல்யாணம் முடிந்தவர் என்ற காரணத்திற்காக அதிலிருந்து மீண்டு வந்தாராம் ஹீரா. சூர்யவம்சம், நட்புக்காக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அந்தக் காரணத்திற்காகவே மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் வரவில்லை. சதிலீலாவதியில் கள்ளக்காதலி வேடத்தில் நடித்ததால் ஹீராவின் மார்க்கெட் சரிந்து போனதாம்.

From Around the web