சிவாஜிகணேசன் என்ற பெயர் வந்தது எப்படி? சுவாரசிய தகவல் தந்த பிரபலம்
தமிழ்த்திரை உலகின் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது இயற்பெயர் விசி.கணேசன். அவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயர் வந்தது எப்படி? வாங்க பார்க்கலாம்.
விசி.கணேசனை சிவாஜி கணேசனாக்கிய பெருமை தந்தை பெரியாருக்கே உண்டு. அப்படிப்பட்ட சிவாஜிகணேசன் விதி என்ற நாடகத்தை பெங்களூருவில் நடத்தியபோது தந்தை பெரியார் அதைப் பார்ப்பதற்காகச் சென்றார். அந்த நாடகத்தின் உச்சபட்சகாட்சியைப் பார்த்த போது பெரியார் விக்கி விக்கி அழுதார்.
அந்தக் காட்சி அப்படி ஒரு உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அந்த நாடகத்தை மட்டும் ரசித்துப் பார்க்கல. அதை விளம்பரப்படுத்துவதற்காகவும், ஒட்டி இருந்த போஸ்டரையும் கவனித்து இருக்கிறார் என்பதை அவர் மேடைக்கு வந்தபிறகு உணர முடிந்தது. நாடகம் முடிந்த உடன் அந்த நாடகத்தில் மிகச்சிறப்பாக நடித்த சிவாஜியையும், மற்ற கலைஞர்களையும் பெரியார் பாராட்டினார்.
அப்போது சக்தி கிருஷ்ணசாமியை அழைத்து இவருக்கு சிவாஜி என்று ஒரு பட்டம் நான் கொடுத்து இருக்கேன். தெரியுமா உங்களுக்கு? அதை ஏன் விளம்பரப்படுத்தவில்லை என கேட்டார். அப்படி கேட்டதுக்குப் பிறகு தான் அந்த நாடகத்திற்கு சிவாஜிகணேசன் என விளம்பரப்படுத்தத் தொடங்கினார்கள். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
