காதலா, சோகமா, சிருங்கார ரசமா? கண்டுபிடிங்கப்பா... தித்திக்க வைத்த இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்!

 
ilaiyaraja music

 

சோக ராகத்தில் சிருங்கார ரசம் ஏற்றி 2 தாளங்களில் நம்மை ரசிக்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளுக்குப் பின் அதிகம் அச்சிடப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் 2 வரிகள். இந்தப் பாடலை கவிக்கோ அப்துல் ரகுமான் எந்தளவுக்குக் கொண்டாடினார்? இவ்ளோ சிறப்புக்குரியது எந்தப் பாட்டு? வாங்க பார்க்கலாம். 

1982ல ஸ்ரீதர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவோட இசையில கார்த்திக், சி.ஜி. மற்றும் பலர் நடித்து வெளியான படம் நினைவெல்லாம் நித்யா. இந்தப் படத்துல எல்லா பாட்டுமே தேன். அதிலும் வைரமுத்து ஒரு பாட்டு எழுதத்தான் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் எழுதியதைப் பார்த்து அசந்து போன ஸ்ரீதர் எல்லா பாட்டையுமே நீங்களே எழுதுங்கன்னு சொல்றார். ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற ஒரு பாட்டையும் அந்தப் படத்தில் எழுதுகிறார் வைரமுத்து.

இந்தப் பாட்டை பந்தோராளி என்ற ராகத்தில் இசைஞானி இசை அமைத்துள்ளார். இந்த ராகத்துக்கு இன்னொரு பேரு காமவர்த்தினி. இது கொஞ்சம் பக்தி. இன்னொரு பக்கம் லேசான சோகம் ததும்பக்கூடிய ராகம். ஆனா இந்தப் பாட்டுலயும் சிருங்கார ரச முயற்சியைக் கொண்டு வந்து இருந்தார் இளையராஜா. இந்த ராகத்துக்கு தமிழ்ல சாதாரிப்பண் என்று பேரு. இது முல்லை நிலத்துக்கானது. அதாவது காடும் காடு சார்ந்த இடத்துக்கும் ஆனது.

இந்தப் பாட்டுக்குள்ள இளையராஜா 2 தாளத்துக்குள்ள பண்ணிருப்பாரு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா ஜானகி 'ஹம்' பண்ணுவாங்க. அப்புறம் இது 3, 4ல வரும். முதல்ல எடுக்குறதுக்கு மட்டும் ஒரு தாளம். அப்புறம் பாட்டுக்குள்ள இன்னொரு தாளம். காதலர்கள் எல்லை கணக்கு வழக்கு இல்லாதது. மேகம் தான் பந்தல். உன் கூந்தல் என் ஊஞ்சல். உன் வார்த்தை சங்கீதங்கள்னு சொல்லிருப்பாரு கவிப்பேரரசு வைரமுத்து. இதில் முதல் சரணத்துல ரொம்ப அழகா சொல்லிருப்பாரு.

'இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை... இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை...' இந்த இடத்தைக் கற்பனை மட்டும் பண்ணிப் பாருங்க. ஒரு பக்கம் வண்டு. இன்னொரு பக்கம் காதலர்கள், இதழ். அடுத்தடுத்த மவுதமே சம்மதம் என்று. தீண்டுதே மன்மத வண்டுன்னு ஒரு சின்ன ஹம்மிங்கோடு சிருங்கார ரசத்தைக் கொடுப்பாங்க.

2வது சரணத்துல 'வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன். இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்... பூவிலே மெத்தைகள் தைப்பேன். கண்ணுக்குள் மங்கையை வைப்பேன். கடைசில நீ கட்டும் சேலைக்குள் நூலாவேன்'னு அவ்ளோ அழகா சொல்லிருப்பாரு. வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது வரிகளைத் தான் இன்றும் திருமண அழைப்பிதழில் அச்சடிக்கிறாங்க. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.   

Tags

From Around the web