இளையராஜாவின் அந்த சாதனை… யாராலும் நெருங்க கூட முடியலயே!

 
இளையராஜாவின் அந்த சாதனை… யாராலும் நெருங்க கூட முடியலயே!

இசைஞானி என்றதும் நம் நினைவுக்கு வருபவர் இளையராஜா தான். ராகதேவன் என்பார்கள். தமிழ்சினிமா உலகை 80, 90களில் தன் இசை சாம்ராஜ்யத்தால் கட்டிப் போட்டு இருந்தார். இவரது இசை என்றாலே யார் நடித்த படம் என்று கூட ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். உடனே திரையரங்கிற்கு ஓடோடி படம் பார்க்கச் சென்று விடுவர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தன் இசை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டு இருந்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்னால இதே மே மாதம் 14ம் தேதி தான் அன்னக்கிளி படம் உருவானது. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் திரையிலே கதாநாயகன் சிவக்குமார் என்றால், திரைக்குப் பின்னாலே கதாநாயகன் இளையராஜா. அதுதான் அவரது முதல் படம். ஆனால் அந்த முதல் படத்திலேயே உச்சத்தைத் தொட்டார் இளையராஜா என்றுதான் சொல்ல வேண்டும். உச்சத்தைத் தொட்டது மட்டும் அவரது பெரிய சாதனை அல்ல. அந்த உச்சத்திலேயே 50 ஆண்டுகளாகப் பயணிக்கிறாரே அதுதான் மிகப்பெரிய சாதனை.

அந்த சாதனை இதுவரை யாரும் நிகழ்த்தாத ஒன்று. இனி எவரும் நிகழ்த்த முடியாத ஒன்றும் கூட. அப்படிப்பட்ட மிகப்பெரிய சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவரது அர்ப்பணிப்பும், உழைப்பும்தான். என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

From Around the web