கண்மணியே காதல் என்பது பாடல் உருவான கதை... அட எஸ்பிபி அவ்ளோ கஷ்டப்பட்டாரா?

 
kanmaniye song, spb

ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் அப்படி ஒரு தேன் சொட்டும் பாடல் என்றால் அது இதுதான். எஸ்பி.பி.யும், ஜானகியும் இணைந்து பாடி அசத்தி இருப்பார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புக்கு இது ஒரு மைல் கல் படம். இந்தப் பாடல் எப்படி உருவானது இது குறித்து இசைஞானி இளையராஜா என்ன சொல்றாருன்னு வாங்க பார்க்கலாம். 

கண்மணியே காதல் என்பது பாடலைப் பாட பாலுவுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரே தம்ல பாட வேண்டி இருந்தது. பாடுறது கஷ்டமா இருந்தது. ஒவ்வொரு சாங்குமே என்னைப் பொருத்தவரைக்கும் எக்ஸ்ப்ரிமெண்ட்தான். அப்போ 3 டிராக் ரெக்கார்டிங்ஸ்தான் இருந்தது. பாடுறதுக்கு கஷ்டமா இருந்ததால 3 ட்ராக்ல ஒரு ட்ராக் முழுக்க ரெக்கார்ட் பண்ணிட்டு ஒரு டிராக்ல ஸ்பேஸ் விடச் சொல்லிட்டேன்;. பாடுறதுக்கு முடியாத இடத்துல எல்லாம் விட்டுரு. அப்புறம் கன்டினியு பண்ணலாம்னு சொல்லிட்டு ஒரு போர்ஷன மட்டும் பாட வச்சிட்டு, இன்னொரு ட்ராக்கை ரன் பண்ணி ரெண்டு சிங்கிளை நாங்க நெகடிவ்ல 35 எம்எம் எடுத்தோம்..   

அப்படி உருவானது தான் கண்மணியே பாடல் என்பது பாடல். இந்தப் பாடலை 20 வயதில் கேட்கும்போது இருந்த அதே ரசனை, 40 வயதானாலும், 60வயதானாலும் அப்படியே நெஞ்சுக்குள் நிறைந்து நிற்கிறது. இன்னும் சொல்லப்போனால் 80 வயது ஆகி அதன்பிறகும் கூட இந்த ரசனை அப்படியே தான் அந்த வயதிலும் நமக்கு மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும் என்பதுதான் நிதர்சனம். அந்தளவு இளையராஜாவின் இசை நமக்குள் எந்த நோயாக இருந்தாலும் அதை ஆற்றிவிடும் வல்லமை படைத்தது என்றால் மிகையில்லை..  

Tags

From Around the web