எனக்குப் பாடம் எடுத்தவர் பாக்கியராஜ்... வாத்தியாராகப் பார்த்த இளையராஜா!

 
bhagyaraj, ilaiyaraja

பாக்கியராஜை முதன் முதலா சந்தித்ததைப் பற்றி இளையராஜா இப்படி சொல்கிறார். 16 வயதினிலே படத்துக்கு பேக் ரவுண்ட் ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்த நேரத்துல கட் கட்னு சத்தம் கேட்குது. அங்கே பாரதிராஜா இருக்காரு. அவருக்கிட்ட கூட்டிட்டுப் போனது பாக்கியராஜ். இவருக்கிட்ட இருந்து 2 பாடம் கத்துக்கிட்டேன். ஒரு நாள் பாரதிராஜா முக்கியமான வேலையா போயிட்டாரு. பாக்கியராஜ் கதை சொல்வாரு. கேட்டுக்கன்னு சொன்னாரு.

என்னய்யா நீ கண்ட கண்ட ஆளை எல்லாம் கதை சொல்லச் சொல்றேன்னு கேட்டேன். பாக்கியராஜ் நல்லா கதை சொல்வாரு. நீ கேளு. கேட்டுப்பாருன்னாரு. நிஜமாஅவரு சொன்ன ஸ்க்ரீன்பிளேவைக் கேட்டு அசந்து போயிட்டேன். சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போயிடுச்சு. என்னய்யா செகண்ட் ஆஃப்னு கேட்டேன். அதுல டைரக்டர் ஏதோ ஐடியா வச்சிருக்காராம்னு சொல்லல. அப்புறம் தான் தெரிஞ்சது.

இவரை ஒரு மாதிரியா ட்ரீட் பண்ணினோம். அது தவறு. யாருக்கிட்ட என்ன திறமைன்னு நம்ம யாரு முடிவு பண்றதுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அதுக்கு அப்புறம் புதுசா யார் வந்தாலும் அவங்களுக்கு மியூசிக் பண்றதுக்கு மறுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அந்த முடிவை எடுக்க வச்சது பாக்கியராஜ். எனக்கே பாடம் எடுத்த வாத்தியார். 

Tags

From Around the web