இசை சொல்லிக்கொடுத்த குருவிடமே சவால் விட்ட இளையராஜா!.. ஒரு பிளாஷ்பேக்...

 
ilayaraja

இசைஞானி இளையராஜா வாய்ப்பு தேடி சென்னை வந்த போது பாரதிராஜா தங்கியிருந்த அறையில் தனது சகோதரர்களுடன் தங்கியிருந்தார். நாடகங்களுக்கு வாசிப்பது, இசை நிகழ்ச்சியில் வாசிப்பது என கிடைக்கும் வேலைகளை அவர் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராக சேர்ந்தார். ஒருபக்கம் அப்போது பலருக்கும் இசையை சொல்லிக் கொடுத்த தன்ராஜ் மாஸ்டரின் வகுப்பிலும் சேர்ந்து அவரிடம் இசை படித்து வந்தார்.

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த இளையராஜா ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். ‘ஜி.கே வெங்கடேஷிடம் நான் உதவியாளராக பணிபுரிந்து வந்ததால் நிறைய படங்களுக்கு இசையமைக்கும் பணியில் நான் உதவியாக இருந்தேன்.. அதனால் தன்ராஜ் மாஸ்டரின் வகுப்புகளுக்கு என்னால் சரியாக செல்ல முடியவில்லை. அதனால் அவருக்கு என் மேல் கோபம் ஏற்பட்டது. மீண்டும் நான் வகுப்புக்கு சென்றபோது ‘இந்த சினிமாக்காரர்களே இப்படித்தான்.. நீயும் அந்த கோலிவுட்காரன்தான்.. என்னிடம் இனிமேல் வராதே. நான் இனிமேல் உனக்கு சொல்லித்தர மாட்டேன்’ என்று கோபமாக கூறினார்..

ilayaraja

அப்போது இசை தொடர்பாக ஒரு பரிட்சையை நான் எழுத வேண்டியிருந்தது. அதற்கு அவர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. அதை காரணமாக சொல்லி எனக்கு அதை சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன். என்னால் முடியாது என மறுத்தார். நான் எவ்வளவு கேட்டும் அவர் அதை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘சார்.. நீங்கள் சொல்லிக் கொடுக்காமலேயே அந்த பரிட்சையில் நான் ஹானர் வாங்கி காட்டுகிறேன்.. இல்லையென்றால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என சவால் விட்டுவிட்டு வந்து விட்டேன்..

ஜிகே வெங்கடேஷிடம் பணிபுரிந்து வந்ததால் இடைவெளி கிடைக்கும் நேரத்தில் படிக்க முடிந்தது. ஆனால், புத்தகத்துக்கு எடுத்து பார்த்தால் ஒன்றும் புரியவில்லை.. இரண்டு, மூன்று முறை படித்து அதை இசையோடு தொடர்பு படுத்திக்கொண்டேன்.. அதில் நிறைய புதிய வார்த்தைகள் இருக்கும்.. அதை இசைக்கலைஞர்களிடம் கேட்டு என்னவென்று தெரிந்து கொண்டேன்.. இப்படியே அதை படித்து பரீட்சை எழுதி 85 மார்க் வாங்கி ஹானர் பெற்றுவிட்டேன். அந்த சான்றிதிழை கொண்டு போய் தன்ராஜ் மாஸ்டர் வீட்டுக்கு போனேன். அவர் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவரின் மார்பில் அந்த சான்றிதழை போட்டேன்.. ‘என்னடா’ என்றார். ‘பாருங்க’..என்றேன். அதை எடுத்து பார்த்தவர் ‘டேய் ராஜா.. நீ சூப்பர்டா’ என்று என்னை பாராட்டினார்’ என்று சொல்லியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5169 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web