ஒரு வருஷத்தில் 58 படத்துக்கு இசையமைத்த இளையராஜா!.. ஆல்டைம் ரெக்கார்ட்!..

 
ilayaraja

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அதற்கு முன்பு கம்யூனிஸ்ட் மேடைகளில் சகோதரர்களுடன் இணைந்து ஆர்கெஸ்ட்ரா நடத்தி வந்தார் இளையராஜா. அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக சினிமாவுலகில் அவர் கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் மனதை கவர்ந்தன. மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது நான்கு வருடங்களில் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் இளையராஜா. 1980களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இன்னும் சொல்லப்போனால் 70 மற்றும் 80 கிட்ஸ்கள் இப்போதும் ரசித்து கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் அவர் 80களில் இசையமைத்த பாடல்கள்தான்..

இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மிகவும் வேகமாக வேலை செய்யக்கூடியவர்.. ரசிகர்கள் இப்போது கூட கேட்டு ரசிக்கும் குணா, சின்னத்தம்பி உள்ளிட்ட பல படங்களின் கம்போசிங்கை ஒன்றரை மணி நேரத்தில் முடித்தவர் அவர். காலை 7 மணிக்கெல்லாம் பிரசாத் ஸ்டுடியோவில் அவரை பார்க்கலாம். நாளின் முதல் பாதி பாடல் ரெக்கார்டிங், இரண்டாம் பாதியில் பின்னணி இசை என பணியாற்றியவர் இளையராஜா..

இந்நிலையில், ஒரு பேட்டி ஒன்றில் அவரிடம் ‘வருஷத்திற்கு 52 வாரங்கள்தான்.. ஆனால் ஒரு வருடம் 57 படத்திற்கு இசை அமைத்தீர்கள். அது எப்படி சாத்தியம்?’ என கேட்டனர். அதற்கு பதிலளித்த இளையராஜா ‘நீங்கள் பாடலுக்கு இசை அமைத்ததை மட்டும் பார்க்கிறீர்கள்.. ஒரு வருடத்தில் 58 படங்களுக்கு நான் இசையமைத்தேன்.  பாடல்கள் மட்டுமல்லாமல் வாரத்திற்கு இரண்டு படங்களுக்கு பின்னணி இசையௌம் அமைத்திருக்கிறேன்.. நேரத்தையும், வேலையையும் பிரித்து எல்லாவற்றையும் உள்ளடக்கி வேலை செய்ததால் என்னால் அதை செய்ய முடிந்தது’ என கூறியிருக்கிறார்.

Tags

From Around the web