மனுசங்கன்னா யாருன்னு அப்பதான் தெரிஞ்சது!.. இளையராஜாவுக்கு நடந்த சம்பவம்..
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளையராஜா. இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 70. 80களில் பிறந்தவர்களுக்கு இப்போதும் இளையராஜா இசைதான் எல்லாம்.
இளையராஜாவின் இசைதான் பலரின் மனக் காயங்களுக்கு மருந்து போடுகிறது. பலரின் பயணங்களில் அவரின் இசை தான் கூடவே வருகிறது. ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இளையராஜா என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இளையராஜா, அவரின் சகோதரர்கள் பாஸ்கர் மற்றும் கங்கை அமரனுடன் ஆகியோர் தேனி, மதுரை வட்டாரங்களில் நடக்கும் கம்யூனிஸ்ட் நிகழ்ச்சிகளில் கச்சேரிகளை நடத்தி வந்தனர். கம்யூனிசம் தொடர்பான பாடல்களை பாடுவது அவர்களின் வழக்கம். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்தார்..
கம்யூனிஸ் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வந்தபோது மதுரையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கம்யூனிஸ்ட் தோழர் எங்களுக்கு பழக்கமாகியிருந்தார். நிறைய கம்யூனிஸ்ட் நிகழ்ச்சிகளை அவர் நடத்துவார். அவரின் அலுவலகத்தில் தங்குவதற்கு இடம் இருந்தது.. நாங்கள் இங்கேயே தங்கிக் கொள்கிறோம் என்று அவரிடம் கேட்டோம்.. அதற்கு அவர் ‘அது சரியா வருமா என்று தெரியவில்லை.. யோசித்து சொல்கிறேன்.. நிறைய பேரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறினார் அப்போதுதான் எனக்கு மனிதர்களின் மனமே புரிந்தது..
எல்லோரும் சமம், மனிதநேயம், அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியெல்லாம் பேசும் கம்யூனிஸ்ட் கூட இப்படி எல்லாம் யோசிப்பார்களா என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன்.. எவனும் நமக்கு உதவ மாட்டான்.. நாம்தான் நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது’ என்று இளையராஜா கூறியிருக்கிறார்.
