பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவிருந்த ஜெயலலிதா.. எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் பாரதிராஜா. அதுவரை அரங்கத்திலேயே படப்பிடிப்பு நடந்த தமிழ் ச்னிமாவை வெளியுளத்திற்கு கொண்டு சென்றவர் இவர். கிராமத்து மக்களின் உணர்வுகளை வாழ்க்கை முறைகளை தத்ருபமாக தனது படங்களில் கொண்டு வந்தார் பாரதிராஜா. இவரது படங்களில் பதினாறு வயதினிலே, மண் வாசனை, கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில் என கிராமத்து மணம் மாறாமல் சொன்ன கதைகள் ஏராளம். கிராமத்து கதைகள் மட்டுமல்லாமல் சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி , டிக் டிக் டிக் என வித்யாசமான வெற்றிப் படங்ளையும் கொடுத்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான படம் புதுமைபெண். ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் ரேவதி நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. முதலில் அந்த வேடத்தில் நடிக்க பாரதிராஜா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நாடினார். அவருக்கும் அந்த கதை பிடித்து நடிக்க சம்மதித்தாராம். ஆனால் ஏனோ திடீரென அந்த படத்தில் நடிக்கவில்லை.
