தளபதில் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது!.. வருத்தமா இருக்கு!.. ஜெயராம் ஃபீலிங்!..
மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தவர் ஜெயராம். தமிழில் கோகுலம் என்கிற திரைப்படம் மூலம் விக்ரமன் இவரை அறிமுகம் செய்துவைத்தார். நடிகராக மட்டுமில்லாமல் மிமிக்கிரி கலைஞராகவும் வலம் வருபவர் ஜெயராம். பொன்னியின் செல்வன் பட விழாவில் இவர் மணிரத்தினம் போலவும், பிரபு போலவும் பேசி காட்டிய வீடியோ ரசிகர்களிடம் பிரபலமானது.
90களில் கதாநாயகனாக நடித்து வந்து ஜெயராம் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். அதேபோல் பல படங்களில் வில்லனாகவும் ஜெயராம் நடித்திருக்கிறார். காந்தாரா 2 படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜெயராம் தன் திரை வாழ்க்கை தொடர்பான பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது தளபதி படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றியும் வருத்தமாக கூறியிருந்தார்.
மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. மம்முட்டிதான் அது பற்றி என்னிடம் முதலில் பேசினார். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் அப்போது நிறைய மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் தளபதி படத்தின் நடிக்க முடியாமல் போய்விட்டது.
ரஜினி, மம்முட்டியுடன் பல முக்கிய காட்சிகள் இருந்தும் தேதிகள் ஒத்து வராததால் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.. அது எப்போதும் எனக்கு வருத்தம்தான்’ என ஜெயராம் கூறியிருக்கிறார்.
