அவன் இவன் படத்தில் நானும், ஜீவாவும் நடிக்கவேண்டியது!. ஜித்தன் ரமேஷ் சொன்ன பிளாஷ்பேக்...

 
jithan ramesh

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷாலும், ஆர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம் அவன் இவன் , இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் ஜனனி, மது ஷாலினி, அம்பிகா, ஜிஎம் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் ஜித்தன் ரமேஷ் ‘நான் நிறைய படங்களை மிஸ் பண்ணிட்டு வருத்தப்பட்டுருக்கேன்.. குறிப்பா அவன் இவன் படத்துல நானும், என் தம்பி ஜீவாவும்தான் நடிக்க வேண்டியது..

முதன் முதலில் பாலா சார் எங்க கிட்டதான் அந்த படத்தோட கதையை சொன்னார்.. நான் விஷால் கதாபாத்திரத்திலும், ஜீவா ஆர்யா கதாபாத்திரத்திலும் நடிப்பதாக இருந்தது.. ஆனால் அந்த நேரத்தில் எங்க ரெண்டு பேருக்குமே மார்க்கெட் இல்லை.. அதனால வேற பெரிய ஹீரோக்களை நடிக்க வைக்கலாம்னு தயாரிப்பாளர் சொன்னதால அந்த படத்தில் நாங்க நடிக்க முடியாம போச்சி’ எனக் கூறியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5162 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web