தமிழில் கமல்ஹாசன், ஹிந்தியில் அமிதாப் பச்சன்... 'ஒரு கைதியின் டைரி' ரீமேக்கில் க்ளைமேக்ஸை மாற்றிய பாக்யராஜ்!

 
K bhagyaraj Kamal Haasan amitabh bachchan

தமிழில் 'அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ். இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவு செய்தியை இன்னும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

சமீபத்தில் தான் பாக்யராஜின் குருநாதர் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார். அதற்குள் அவருடைய சிஷ்யருக்கும் இப்படியாகி விட்டதே என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வருத்தப்படுகிறார்கள்.

1985-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் 'ஒரு கைதியின் டைரி'. 'உலக நாயகன்' கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தின் கதை, வசனத்தை எழுதியவர் பாக்யராஜ் தான்.

இதனால், இதன் ஹிந்தி ரீமேக்கான 'ஆக்ரீ ராஸ்தா'-வில் முன்னணி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க, பாக்யராஜே திரைக்கதை எழுதி அதை இயக்கினார். ஹிந்தியிலும் இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் கே.பாக்யராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில் 'ஒரு கைதியின் டைரி'-யின் ஹிந்தி ரீமேக் குறித்து பேசுகையில் "நான் இதோட கதையை அமிதாப் பச்சன் சாரிடம் எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்ல சொல்லி தான் ஓகே பண்ணேன். ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது.

அவர் கதைய கேட்டுட்டு பிடிச்சிருக்கு பண்றேன்னு சொல்லிட்டார். அப்போ தமிழ் வெர்ஷனும் ரிலீஸ் ஆகல. அமிதாப் சார் அதை ரிலீஸ் ஆன பிறகு கூட பாத்துக்கலாம். நம்ம இதை ஆரம்பிப்போம்ன்னு சொல்லிட்டார்.

தமிழ் வெட்ஷன்ல நான் எழுதின க்ளைமேக்ஸை பாரதிராஜா சார் மாத்தி வேற ஒன்னு எடுத்தார். நான் ஹிந்தில நாம எழுதினதை தான் வைக்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்புறம் நாங்க ஹிந்தில க்ளைமேக்ஸ் ஷூட் பண்றதுக்கு முன்னாடியே தமிழ்ல படம் வந்து பெரிய ஹிட்டாயிருச்சு.

அமிதாப் சார், ஹிந்தி படத்தோட தயாரிப்பாளருன்னு, அந்த மொத்த டீமுமே படம் பாத்துட்டாங்க. இதனால என்னாச்சுன்னா, இப்போ நான் ஹிந்தி க்ளைமேக்ஸ ஷூட் பண்ண ஸ்பாட்டுக்கு போனபோது ஒரு பிரச்சனை வந்துச்சு.

தயாரிப்பாளர், ஸ்டன்ட் இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவங்க எல்லாருமே தமிழ்ல க்ளைமேக்ஸ் சூப்பரா இருந்துச்சுல சார். நம்ம அதையே பண்ணலாம்லன்னு என்கிட்ட சொல்றாங்க. அப்புறம் அமிதாப் சார் ஸ்பாட்டுக்கு வந்தார். நான் அவர்கிட்ட சொன்னேன், இவங்க எல்லாரும் இப்படி சொல்றாங்க சார். ஆனா, எனக்கு இவங்க சொல்றதுலாம் முக்கியம் இல்ல.

ஏன்னா, அவங்கலாம் behind the screen-ல இருக்குறவங்க. ஆனா, நீங்க ஹீரோ screen-ல வருவீங்க. அதுனால உங்க mind-லையும் இந்த விஷயம் இருந்துச்சுன்னா அது screen- ல தெரியும் சார். அதுனால நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க சாருன்னு சொன்னேன்.

அதுக்கு அமிதாப் சார் சொன்னார், சார் தமிழ் வெர்ஷன் க்ளைமேக்ஸ் எனக்கும் பிடிக்கும். ஆனா, உங்க mind-ல என்ன மாதிரி விஷுவலோட அந்த க்ளைமேக்ஸ் இருக்குன்னு தெரியாம என்னால எப்படி ரெண்டையும் compare பண்ண முடியும்.

அதுனால, நான் அந்த க்ளைமேக்ஸ மறந்துட்டு, ஒரு நடிகரா வர்றேன் சார். நீங்க உங்க க்ளைமேக்ஸ எடுங்க சாருன்னு சொல்லிட்டார். அப்புறம் க்ளைமேக்ஸ் எடுத்து முடிச்சு எடிட் பண்ணி பார்த்த போது, தமிழ் வெர்ஷனை விட இந்த க்ளைமேக்ஸ் நல்லா இருக்குன்னு அமிதாப் சாரே என்கிட்ட சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web