'சொக்கத்தங்கம்' ஷூட்டிங் டைம்ல கே.பாக்யராஜுக்கு ஒரே ஒரு ரெக்வஸ்ட் வச்ச விஜயகாந்த்!
நடிகர் விஜயகாந்த் - இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் இருவருமே மறைந்து விட்டாலும், எப்போதுமே அவர்களின் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஜயகாந்தை வைத்து கே.பாக்யராஜ் இயக்கிய 'சொக்கத்தங்கம்' படம் 2003- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ஹீரோயினாக சௌந்தர்யா நடிக்க, முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், உமா, சுவாதி, செந்தில், கவுண்டமணி நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் கொடுத்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசுகையில் "'சொக்கத்தங்கம்' ஷூட்டிங் டைம்ல தான் நான் பார்த்தேன், எங்க பார்த்தாலும் விஜயகாந்தோட ரசிகர் மன்ற பேனர்கள் இருக்கும்.
வில்லேஜுக்கெல்லாம் போகும்போது அங்கெல்லாம் நிறைய மன்றங்கள் இருக்கும். அப்போ, விஜயகாந்துக்கு இவ்ளோ மன்றங்கள் இருக்குன்னா அதை எவ்ளோ கட்டுக்கோப்பா வளர்த்திருப்பாருன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்போ, அந்த படம் பண்ணும்போது என்கிட்ட விஜயகாந்த் ஒரே ஒரு request மட்டும் வச்சார். அண்ணா, எனக்கு sunday மட்டும் ஷூட்டிங் வைக்காதீங்கன்னு என்கிட்ட சொன்னார். outdoor-ல வந்துட்டு sunday ஷூட்டிங் வைக்கலேனா தயாரிப்பாளருக்கு நஷ்டமாகுமேன்னு சொன்னேன்.
அதுக்கு அவர், நான் வாரத்துல அந்த ஒரு நாள் தான் என்னோட ரசிகர்களை சந்திக்க சான்ஸ் கொடுக்குறேன். அவங்கள உற்சாகப்படுத்துவதற்காக என்ன sunday மட்டும் விட்ருங்கன்னு சொன்னார். அந்த அளவுக்கு அவர் தன்னோட ரசிகர்களை பக்குவமா அரவணைச்சிட்டு வந்தது, பின்னால கண்டிப்பா அவருக்கு பெரிய லெவல்ல லைஃப்ல உதவி பண்ணும்ன்னு அப்பவே நான் ஃபீல் பண்ணேன்" என்று கூறியுள்ளார்.
