கல்யாண ராமன் படம் உருவாகக் காரணமே அதுதானா? அட இப்ப தானே தெரியுது!
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் கல்யாண ராமன். ஒரு கமல் பல் துருத்தியபடி பார்க்கவே காமெடியாகவும், அவரது நடிப்பு வெகுளித்தனமாகவும் ஒரு பரிதாபமாகவும் இருக்கும். அதற்கு நேர் மாறாக மற்றொரு கமல். ஸ்டைல் லுக்கில் செமயாக நடித்து இருந்தார். படத்தில் கதாநாயகி ஸ்ரீதேவி. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் இனிமை. அந்தப் படத்தின் மூலம் எங்கிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
அந்த நாள் படத்தின் இயக்குனரான எஸ்.பாலசந்தர் தமிழ்சினிமா உலகிலே பல சாதனைகளைச் செய்தவர். அவற்றில் இதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்ல உருவான முதல் இரட்டை வேட சமூக படம் இது நிஜமா. அந்தப் படத்தில் இரட்டை வேடங்கள்ல நடிக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவர் எஸ்.பாலசந்தர். சமூக படத்தில் எஸ்.பாலசந்தர்னா, ராஜா ராணி கதையில முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் பியூ.சின்னப்பா.
உத்தமபுத்திரன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். இது நிஜமா மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால தொடர்ந்து பல படங்களை இயக்கக்கூடிய வாய்ப்பும் நடிக்கக்கூடிய வாய்ப்பும் எஸ்.பாலசந்தருக்குக் கிடைத்தது. அதையெல்லாம் தாண்டி இது நிஜமா படத்தைப் பற்றி ஒரு முக்கியமான தகவல் இது. அது என்னன்னு பார்ப்போம். இது நிஜமா படத்தைத் தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட படம்தான் கமல் நடித்த கல்யாணராமன். இது நிஜமா படத்தைப் போலவே அந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்பது நாம் அறிந்த விஷயம்.
