1987ல் தீபாவளிக்கு வந்த 11 படங்கள்... கமல், ரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜயகாந்த்!

 
rajni, vijayakanth, kamal

1987ல் அக்டோபர் 21ல் தீபாவளி வந்தது. இது தமிழ்த்திரை உலகில் இது ஒரு முக்கியமான தீபாவளி. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மனிதன் வெளியானது. கமல் நடிக்க, நாயகன் படம் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தது. விஜயகாந்த் டபுள் ஆக்ஷன். ராதா, ராதிகா ஜோடி. விஜயகாந்த் தயாரிப்பில் முதல் படம். அருண்ராஜ் இயக்கிய படம். விஜயகாந்த் ஸ்டைலே இதுல வேற லெவல். அடுத்து விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு விளையாட்டு. ராதா ஜோடி. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். இதுல சின்ன வயது விஜய் நடித்து இருந்தார்.

பாலசந்தர் தயாரித்து இயக்கியது மனதில் உறுதி வேண்டும். படத்தில் சுஹாசினி, எஸ்பிபி., நடித்து இருந்தார். பிரபு, அம்பிகா நடித்த இவர்கள் வருங்காலத் தூண்கள் வெளியானது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் டி.ராஜேந்தர். ராமராஜன், நிஷாந்தி நடித்த படம் நேரம் நல்லா இருக்கு வெளியானது. சுரேஷ், நதியா, எஸ்.வி.சேகர் நடித்த இனிய உறவு பூத்தது படம் வெளியானது. டி.ராஜேந்தர் திரைக்கதை எழுதி, இசை அமைத்து, விநியோகம் செய்த படம் பூக்கள் விடும் தூது வெளியானது. மணிவண்ணன் இயக்கத்தில் ராதிகா, ரகுவரன், முரளி நடித்த படம் புயல் பாடும் பாட்டு. கலைஞர் திரைக்கதை எழுதி இருந்தார். சுரேஷ், ஜெயஸ்ரீ, சரத்பாபு நடித்த படம் செல்லக்குட்டி. தேவர் பிலிம்ஸ் தயாரித்தது.

மேலே சொன்ன படங்களில் நடிப்பு என்று பார்த்தால் கமலின் நாயகன் தான். இன்று வரை பேசப்படும். ரஜினியின் மனிதன் படமும் சூப்பர்ஹிட் தான். விஜயகாந்தின் உழவன் மகன் வசூல் ரீதியில் மாஸ் காட்டியது. மனிதன் படமும் அப்படித்தான். நாயகன் ஒரு கல்ட் கிளாசிக் மூவி. மொத்தத்தில் பார்த்தால் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது உழவன் மகன் படம் தான். 300 நாள்களைக் கடந்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதனும், நாயகனும் வெள்ளி விழா கண்டன.

Tags

From Around the web