10வருடத்துக்கு பிறகு வர வேண்டிய படத்தை இப்பவே எடுக்கிறேனா? கமல் ஒத்துக்கொண்டாரா, இல்லையா?
பொதுவாக கமல்ஹாசனின் திரைப்படங்களைப் பற்றிச் சொல்லும் போது 10 வருடங்களுக்குப் பின்னால எடுக்க வேண்டிய திரைப்படத்தை இப்போதே எடுத்து விட்டார் என்ற விமர்சனத்தை, அவருடைய பல படங்கள் சந்தித்து இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தை சந்தித்த படம் தான் ஹேராம். ஆனால், அந்த விமர்சனத்தை கமல் ஏற்றுக்கொள்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவ்வளவு முன்னோடியாக எந்த மனிதனாலும் எடுக்க முடியாது. இது அப்போ வரணும். வந்திருக்கு. அப்படி என்றால் பாகுபலி 30 வருடங்களுக்கு முன்னால் வரவேண்டிய சினிமா என்று சொல்லலாமா? அதுல வந்த எல்லா கதைகளையும் நாம அம்புலிமாமாவுலயும் பார்த்திருக்கோம். மகாபாரதத்திலும் படிச்சிருக்கோம். அதை விடுங்க.
அந்த நாள் படத்தைப் பற்றி என்ன சொல்றீங்க? 50 வருடங்கள் கழித்து வர வேண்டிய படம் என்று சொல்வீர்களா? இன்றைய சினிமா இல்லையா. அப்படி சிலர் செய்வார்கள். ஆனால், அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. ஒரு சிலரை நம் மக்கள் ஒரே தூக்காகக் தூக்கி விடுவார்கள். 16 வயதினிலே படத்திற்கு அதுதான் நடந்தது.
அந்தப் படத்திற்கு அப்படி ஒரு ஆதரவை மக்கள் தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. வித்தியாசமாகப் பண்ணனும்னு நினைச்சி அந்தப் படத்தைப் பண்ணினோம். மக்கள் எங்களை ஒரே தூக்காகக் தூக்கி வைத்து விட்டார்கள். அந்தப் படத்தினால பாரதிராஜா உள்பட எத்தனை பேருக்கு வாழ்க்கை கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார் கமல்.
