ஒரே குழப்பம்... எல்லாம் சொதப்பல் படங்கள்... கமலின் பாதையை அடையாளம் காட்டியது அவரா?
கமல் இன்று 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு முக்கியமான கதாநாயகன். அவருக்கு ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் இதுதான். கேட்டா அசந்து போயிடுவீங்க. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
உணர்ச்சிகள் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ஒரு தயாரிப்பாளரோட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். படத்தின் பூஜை அன்னைக்கு அந்ததயாரிப்பாளரைக் காணோம். எங்கே இருக்காருனு தேடிப் போனா, லிபர்டி தியேட்டர் எதிர்க்க அப்சரா என்ற லாட்ஜில தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். என்ன விஷயம்னு கேட்டப்ப, பணம் கொடுக்குறேன்னு சொன்ன பைனான்சியர் ஏமாத்திட்டாரு.
என்ன பண்றதுன்னே தெரியல என்று சொன்ன அந்த தயாரிப்பாளரை முதலில் ஆறுதல் படுத்தினார் கமல். அதன்பிறகு அவரும், ஆர்.சி.சக்தியும் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்த போதுதான் உணர்ச்சிகள் கதை உருவாயிற்று. அதைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. அந்தப் படத்தை இயக்குவதற்கு ஆர்.சி.சக்திக்குக் கொடுக்கப்பட்ட முன்பணம் எவ்வளவுன்னு கேட்டா ஆச்சரியப்பட்டுருவீங்க. வெறும் 10 ரூபாய்.
அந்தப் படத்தின் கதாநாயகியான எல்.காஞ்சனாவுக்கு 5 ரூபாய். இப்படி 15 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் அது. பல பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்துல தனக்கு வந்த படவாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்தார் கமல். அப்போது நடித்த ஒரு சில படங்கள் அவருக்கே பிடிக்காதவையாக இருந்தன.
ஆனாலும் வேற வழியில்லை என்றதால நடிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. நாம இதுமாதிரி படங்கள்ல நடிச்சிட்டு இருக்கோம். இதை எல்லாம் பார்த்துட்டு நண்பர்கள் கிழிச்சி தோரணம் கட்டுவாங்களே அப்படிங்கற பயம் கூட அந்தக் காலகட்டத்திலே கமலுக்கு இருந்தது. தமிழ் சினிமாவை கிழி கிழின்னு கிழிச்சிட்டு இவனும் இப்படிப்பட்ட படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கானேன்னு அவங்க சொல்வாங்களே அப்படிங்கற ஒரு ஆதங்கம் கமலின் மனதில் இருந்தது.
அப்போதுதான் அவள் அப்படித்தான் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தனக்குப் பிடிக்காத பல படங்களில் நடித்த பாவத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவசரம் அவசரமாக அவள் அப்படித்தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் கமல். அந்தக் குழப்பமான சூழ்நிலையில நான் தெளிவு பெற காரணமாக இருந்த ஒரே நபர்னா அவர் அனந்துதான். அவர்தான் சினிமாவில் என் பாதை என்ன என்பதை எனக்குக் காண்பித்தார் என்ற ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் கமல்.