தீபாவளிக்கு தெறிக்க விட்ட கமல் படங்கள்... பிளாக்பஸ்டர் ஹிட் இத்தனையா?
தீபாவளி வந்து விட்டாலே கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏன்னா வருடந்தோறும் தீபாவளி அவர்களுக்கு இரட்டை தீபாவளியாகத் தான் இருக்கும். அப்போது வரும் கமல் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். வாங்க விவரமா பார்ப்போம்.
1983ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான கமல் படம் தூங்காதே தம்பி தூங்காதே. 253 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. 1984ல் வெளியான எனக்குள் ஒருவன் படம் 125 நாள் ஓடியது. இது ஒரு தெலுங்கு டப்பிங் மூவி. 1982ல் வெளியான பகடை பன்னிரண்டு 100 நாள் ஓடியது. இது ஒரு டப்பிங் மூவி. 1980 முதல் 1983 வரை தொடர்ந்து 4 தீபாவளிக்கும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் தீபாவளி ரிலீஸ் படங்களில் 22 படங்கள் 100 நாளுக்கு மேல ஓடிருக்கு.
அதுல 12 படங்கள் வெள்ளி விழா. மொத்தம் கமலுக்கு 25 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனவை. 1974ல் அவள் ஒரு தொடர் கதை. அதில் ஆரம்பித்துஇ 2015ல் தூங்காவனம் வரை அவர் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸ் பண்ணிருக்காரு. 2001 ஆளவந்தானுக்குப் பிறகு 25 வருடங்களில் கமலுக்கு ஒரே ஒரு திரைப்படம் தான் தீபாவளி ரிலீஸ். அதுதான் தூங்காவனம். 1974ல் ஆரம்பித்து 2001 வரைக்கும் 27 வருடங்களில் மட்டும் 20 பிளாக் பஸ்டர் படங்கள் கொடுத்தவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
