நான் கேட்டது ஒன்னு.. கமல் எனக்கு பண்ணது ஒன்னு!. புலம்பும் லிங்குசாமி...
ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஒரு கட்டத்தில் திருப்பதி பிரதர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். இவர் தயாரிப்பில் வெளிவந்த கும்கி, மஞ்சப்பை, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அப்போதுதான் கமலை வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாம் என லிங்குசாமி ஆசைப்பட்டார். ஒரு நாயகனைப் போல, தேவர் மகனைப் போல ஒரு படத்தை எடுக்கலாம் என ஆசைப்பட்டு கமலை சந்தித்து பேசினார். ஆனால் கமலோ உத்தம வில்லன் கதையை லிங்குசாமியிடம் கொடுத்தார்.
லிங்குசாமியோ தயங்கினார். ஆனால் கமலோ ‘கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் நம்புங்கள்’ என்று சொல்லி படத்தை துவங்கினார். ஆனால் அப்படி வெளியான உத்தம வில்லன் திரைப்படம் நஷ்டமடைந்து லிங்குசாமிக்கு பல கோடி நஷ்டத்தை கொடுத்தது..

இந்நிலையில் இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி ‘நாங்கள் கமல் சாரிடம் வேறு ஒன்றை கேட்டோம். அவர் உத்தம வில்லன் கதையை கொடுத்தார்.. அவரிடம் எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த கதை ஓடாது என என் சகோதரர் என்னிடம் சொன்னார். மேலும், மலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கை வாங்கி அதை படமாக எடுக்கலாம் என்று சொன்னார்.
நான் கமல் சாரை சந்தித்து இதுபற்றி பேசினேன். அவரோ ‘அது வேண்டாம். நான் மட்டுமல்ல.. இரண்டு நடிகர்களின் பெயர்களை சொல்லி ‘அவர்கள் கூட இந்த கதையில் நடிக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். ஆனால் உத்தமவில்லன் தோல்விக்கு பின் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் சார் நடித்த அது ஹிட் அடித்தது’ என லிங்குசாமி புலம்பியிருக்கிறார்.
